Tuesday, December 7, 2010

அடுத்த வினாடி:

எப்பவும்
சந்தோஷமாக
வாழ் வேண்டும்
என்று நீங்கள்
நினைத்தால்
எப்ப வேண்டுமானாலும்,
மரணமடைய
தயாராக
இருக்க வேண்டும்.

கற்பனை:

இல்லாத
நிஜத்திற்க்கு
பெயர்
கற்பனை.

மாற்றம்:

சாகனும் என
நினைத்த
போது கூட
நான்
சந்தோஷமாகதான்
இருந்தேன்

வாழனும்
என்று நினைத்தும்
இன்று
வறுத்தமாக
இருக்கிறேன் - நீ
என்னோடு
இல்லாததால்.

உனக்காகத்தான் காத்திருக்கிறேன்:

தனிமை மட்டும்
தனியாக
இருக்கும்போது
தனிமையில்
தனியாக
உட்கார்ந்து
நிஜங்களை
பிரிந்து தனியாய்
தவிக்கும்
நினைவுகளுடன்
நானும்
வாய்பேச முடியாமல்,
காது கேளாமலும்
காட்சிகளை மட்டும்
கண்களில்
பதிவு செய்துக்கொண்டு
யாருக்காகவோ,
எதற்க்காகவோ
காத்து கொண்டிருக்கிறேன்.
கவிதையாய் நினைத்து
கண்களில்
உன்னை சுமந்து.

வற்றாத நதி:

வறுமையிலும்
வளமாக
வருகிறது - கவிதை.

வேறுபாடு:

வாழ்க்கையொரு
கவிதை
அதை வாசிக்கும்
விதத்தில்தான்
எல்லாரும்
வேறுபடுகிறார்கள்.

தற்கொலை:

விரும்பி
செய்யும்
தற்கொலை
ஒருதலை
காதல்.

நல்லவன்:

உறங்கும் போது
மட்டும்
உலகில்
எல்லாரும்
நல்லவர்கள்.

அக்கறை:

என்
முன்னேற்றத்தில்
பெரிதும்
அக்கறை
கொண்டவர்கள்
என்னை
எதிரிகளாக
நினைப்பவர்களாகதான்
இருக்க முடியும்.

வானவில்:

வானவில்
என்றால்
ஏழு நிறங்கள்
இருக்கவேண்டும்
என்ற
நியதி ஏதும் இல்லை.
என்னவள்
போல்
இளஞ்சிவாப்பாகவும்
இருக்கலாம்.

மழைகாலம்:

மழைகால
தீபாவளி,
வான வேடிக்கை
கண்களில் மவுனமாய்
மின்னல்
எங்கேயோ
ஆர்பரிக்கும்
இசை கச்சேரி.

காதல் அழிவதில்லை:

காதலர்களுக்குள்
இருக்கும் காதலை
பிரிப்பதற்க்கு
காதலர்களுக்கே
உரிமை கிடையாது.

கவிதை:

எழுதி வருவது இல்லை
கவிதை
எழுத தோன்றுவதுதான்
கவிதை.

வளம்:

வறுமை மட்டும்தான்
நம் நாட்டில்
வளமாக வளர்கிறது.

உலக சுதந்திரம்:

உலகின்
ஒவ்வொன்றும்
ஒவ்வொருவருக்கும்
என்று சொந்தமாகிறதோ
அன்றுதான்
உலகத்திற்க்கு
சுதந்திரம் கிடைத்த
தினமாகும்.

ஆச்சரியம்:

உன்முகம்
காணத்தான்
தினமும்
உதிக்கிறேன்
சூரியன்.

சிறு சந்தோஷம்:

நான்
இப்போதெல்லாம்
அடிகடி உன்னிடம்
சண்டை போடுவதே
நீ
சண்டையிலாவது
என்னிடம்
பேசுகிறாய்
என்பதால் தான்.

வழிகாட்டி:

வெற்றியாளனின்
சிறந்த வழிகாட்டி
அவனது
தோல்விகளும்,
எதிரிகளும்தான்.

காதலன்:

சாதி, மதம்
எதுவும் எனக்கு
தெரியாது - உன்னை
மட்டும் விரும்பும்
சிறு குழந்தை நான்.

காரணம்:

எல்லாரும்
தான் செய்யும்
எந்தவொரு
செயலுக்கும்,
தனக்கும் தன்
செயலுக்கும்
சாதகமான ஒரு
காரணத்தை
உருவாக்கி கொள்கிறார்கள்.

No comments: