Thursday, December 16, 2010

உனக்குள்:

நீ
தேடிகொண்டிருக்கும்
அமைதி
உனக்குள்தான்
இருக்கிறது.

சுருக்கம்:

உன்
சிந்தனை
என்றுமுதல் வளர
தொடங்குகிறதோ?
அன்றுமுதல்
உலகம் சுருங்க
தொடங்குகிறது.

பிரிவினை:

மதம்பார்த்து
பெய்வதில்லை - மழை
சாதி பார்த்து
தூவுவதில்லை - சாரல்.

அழகு:

அமைதி
எவ்வளவு
அழகானது.

மோதிபார்:

முடியாது என்று
பதுங்குவதை விட
முடிவும் என்று
முயற்சி செய்
உன் தோல்வி கூட
சுவடுகளாகும்
வரலாற்றில்.

புதியது:

ஒவ்வொரு
உதயமும்
புதியதுதான்.

சிறியது:

உலகம்
மிகவும் சிறியது
தான்.
நம்
எண்ணங்களை
விட...

கவலை:

சிறு சிறு
இழப்புகளை
எல்லாம்
பெரியதாக எண்ணி
வாழ்வில் பெரிய
தருணங்களை
நழுவ விடாதே.

கானல்:

யாரோ காணும்
கனவில்
விளையாடும்
சிறு குழந்தையா
நான்
சற்று நேரத்தில்
மறைந்து
விடுவதற்க்கு.

பிரிவினை:

எல்லா
மதத்தின்
கோவில்களும்
இரவில்
கருப்பாகதான்
இருக்கும்.

பொருமை:

எதற்க்காகவோ
காத்திருப்பதை விட
எழுந்து
செயல்படுவது
நல்லது.

தீர்வுகள்:

நீ
எடுக்கும்
எந்தவொரு
முடிவுக்கும்
சரி, தவறு
என்ற இரண்டு
தீர்வுகள் மட்டும்தான்
உள்ளது.

புதிய கவிதை:

கவிதை எதுவும்
தோன்றவில்லை,
அதனால்
கவிதை எதுவும்
எழுதவில்லை.

நல்லது:

சில கனவுகள்
எதிர்பார்ப்பாகவே
இருப்பதே நல்லது
சில
எதிர்பார்ப்புகள்
கனவுகளாக
இருப்பதுவே
நல்லது.

பொய்:

உன்
பெயருடன்
ஒப்பிடும்
போது
கவிதை என்பது
பொய்யாகிறது.

பிரதிபலிப்பு:

தன்னம்பிக்கை,
சந்தோஷம்
இதில் எதை
நீ
பிறருக்கு
கொடுத்தாலும்
அதைவிட அதிகமாக
உனக்கு
திரும்ப கிடைக்கும்.

தலைவன்:

உலகில்
உயர்ந்த
பொருப்பு
மனிதன்
என்பது தான்.

ஊடல்:

உன்னை
நான்
காதலிக்கிறேன்
என்று
எனக்கு
தெரியாது.

சுதந்திரம்:

வண்ணத்துபூச்சியை
எல்லாரும்
விரும்புவதே - அது
சுதந்திரமாய் சுற்றி
திரிகிறது என்பதால்தான்
காதலிலும்
அப்படிதான்.

கனவு காதல்:

சில நொடிகள்
மறு ஜென்மம்
எடுத்து வருகிறது
மீண்டும்
உன்னுடன்
வாழ்ந்து
பார்ப்பதற்க்காக.

No comments: