Monday, December 6, 2010

நான் யார்?:

நான்
சிந்திக்கிறேன் - நான்
ஏன் சிந்திக்கிறேன் - நான்
ஏன் என சிந்திக்கிறேன்
நான் சிந்திக்கிறேன்
நான் ஏன் என ஏன்
சிந்திக்கிறேன்?...

ஆசிரியர்:

இந்த
உலகில்
மிக சிறந்த
பயிற்சியாளர்
"தனிமை"

வாயிற்காவலன்:

நீ வரும்
பாதையில்
உன்னை வரவேற்க - நான்
வாயிலோடு வாயிலாக - நீ
என்னை தாண்டி
சென்றதுகூட தெரியாமல்...
காத்திருக்கிறேன்.

மழலைபோல்:

நான் உன்னை
பார்க்காத வேலையில் - நீ
என்னை பார்த்ததை,
நான் பார்த்துவிட்ட
தருணத்தில்
வகுப்பறையில்
சிறகுவிரித்து பறந்த
ஆயிரம்
வண்ணத்துபூச்சியையும்,
அடிமைபடுத்தி - நானே
ஆயிரம் பட்டாம்பூச்சியாய்
சிறகுவிரித்து பறந்தேன்.

ரகசியம்:

ஒவ்வொருவரும்
தான்
எதற்க்காக
மரணமடைகிறோம்
என தெரிந்துகொண்டு
மரணமடையவேண்டும்.

மலிவு:

என்
நாட்டில் மிகவும்
மலிவாக
கிடைக்கும் பொருள்
ஏழைகளின் உயிர்.

தகவல்:

என்னை
சுற்றியிருக்கும்
ஒவ்வொன்றும் - என்
எதிர்காலத்திற்கான
ஒரு தகவலை
சுமந்துகொண்டு
காத்திருக்கிறது.

தூண்டுதல்:

எனக்கு
தெரியாத - என்
வலிமையை கூட
என் எதிரிகள்தான்
எனக்கு
அறிமுகப்படுத்துகிறார்கள்.

கதா நாயகன்:

உலகில் அ நியாயங்கள்
கட்டவிழ்த்து விடும்போது
காலம் கண்டிப்பாக
அ ந்த அ நியாயங்களுக்கு
எதிராக ஒரு
கதா நாயகனை
உருவாக்கும்.

தவம்:

இன்று
இரவு முழுவதும்
கண்  விழித்து
காத்திருக்கிறேன்.
நாளை
சில நிமிடங்கள்
உன்னை - காண
வேண்டுமென்பதற்க்காக....

அதிசயம்:

சில
வேளைகளில்
தேவதைகள் - வழிதவறி
பூமியில்
பிறந்து விடுகின்றன.
என்பதை
என்னவளை பார்த்தபின்புதான்
நம்பினேன்.

மவுன வலி:

சில வினாடி
வலி கூட
சுகமாகத்தான்
இருக்கிறது.
என்னவள்
என்னிடம்
பேசாமல் இருக்கும்போதும்.

புகைபடம்:

நிகழ்காலத்தில்
நிகழ்ந்த நிகழ்வில்
ஒரு வினாடியை
சிறைபிடித்து விட்டேன்
உன்னுடன் சேர்த்து
புகைபடமாக...

வசியம்:

நீ
என்னிடம்
பேசாமல்
இருப்பதால்
பல மடங்கு அன்பை
என்னுள்
விதைத்துவிட்டாய்...

பங்கு:

என் நாட்டில் - எங்கோ
ஓர் மூலையில் எவரோ
சிரிக்கின்றனர் என்றால் அதற்கு
வேண்டுமானால் நான் காரணாமாக
இல்லாமல் இருக்கலாம் - ஆனால்
என் நாட்டில் எந்த ஒரு
மூலையில் யார்
கண்ணீர் சிந்தினாலும் கண்டிப்பாக
அதில் எனக்கும் பங்கு உண்டு.

வரையறை:

தவறு செய்பவன்
மனிதன்
பொருத்துகொள்பவன்
சராசரி மனிதன்
தட்டிகேட்பவன்
கிறுக்கன்.

வரம்:

பூக்களை பறிக்காதே என்ற
எச்சரிக்கைக்கு புறம்பாக - பறித்தேன்.
என்னவள் தலையில் வைத்தால்
பூக்களும் புன்னகைக்கும்
என்பதால்....

கண்ணாடி:

என் செயல்களுக்கு
எதிராக எப்போது - எதிர்ப்புகள்
கிளம்புகிறதோ அப்போது நான்
உணர்ந்து கொள்வேன் - நான்
சென்றுகொண்டிருக்கும் பாதை
சரியானது தான் என்று.

நிஜம்:

எந்த செயலையும்
நாளை தள்ளிவைக்காதே,
இன்று மட்டும்தான்
உனக்கு சொந்தம்.

உதயம்:

தினம் ஒரு கவிதை
சூரியன் உதிப்பதும்,
மாலையில் மறைவதும்.

No comments: