Monday, December 6, 2010

நல்ல நேரம்:

நல்ல காலம்
பார்க்கும்
மனிதன்,
வசிக்கும் பூமி
எந்த காலமும்
பார்ப்பதில்லை
சூரியனை
சுற்றுவதற்க்கு.

நினைவுகள்:

என்
உலகில்
பலபேர்
இறந்தகாலத்திற்க்காகதான்
வாழ்ந்துகொண்டிருக்கிறாகள்.

மொழிபெயர்ப்பு:

நீ
என்னை
ஓரகண்ணால்
பார்த்தபோது
என்
இதயத்தின்
உணர்வுகளை
கவிதையாக
மொழிபெயர்க்க
முடியவில்லை
என்னால்.

தேடல்:

இந்த
உலகம்
புகழ்வதற்க்கும்,
இகழ்வதற்க்கும்
எவனோ ஒருவனை
தேடிகொண்டுதான்
இருக்கும்
காலத்திற்கும்.

முடிவு இல்லா தொடக்கம்:

ஒரு முயற்ச்சியின்
ஆரம்பம் தான்
வெற்றியும், தோல்வியும்
அதுவே
முற்றுபுள்ளி
அல்ல.

அழுகை:

அழுகைதான்
ஆனந்தத்தின்
எல்லை.

ஏன்? எதற்க்கு?:

தவறு என
தெரிந்தும்
கேள்வி கேட்காமல்
இருக்கும்
மக்களுக்கு எதற்க்கு
சுதந்திரம்.

ஆசை:

என்
வாழ் நாளில்
நான்
வாழ நினைக்கும்
நாளைவிட
வாழகூடாது,
என் நினைக்கும்
நாட்கள் தான்
அதிகம்
நீ
இல்லாததால்.

ஒற்றுமை:

இந்த
உலகம்
ஒற்றுமையாய்தான்
இருக்கிறது - உலகம்
ஒற்றுமையாய்
இருக்க கூடாது
என்பதில் மட்டும்.

துர்பாக்கியம்:

உன்மீது போர்
தொடுத்தாவது
உன்னை
வென்றிருப்பேன்.
அதற்க்கும்
வாய்ப்பு கிடைக்கவில்லை,
வளர்ந்து கெட்ட
இந்த
நாகரீகத்தால்.

பேராசைகாரன்:

இன்றுமுதல்
நான்
பேராசைகாரனாகி
விட்டேன்.
உன்னை
பார்த்தவுடன்
திருமணம்
செய்துகொள்ள
நினைத்ததால்.

உரிமை:

இந்த உலகம்
எனக்கு
உரிமை
இருக்கிறது.

உள்ளுணர்வு:

பேச மறுக்கும்
உதடுகளுக்கும்,
பார்க்க மறுக்கும்
கண்களுக்கும் தான்
காதல் அதிகம்.

விலைமதிப்பு:

உண்மை
மட்டும்தான்
இன்றைய
சூழலில் அதிக
விலை போகிறது.

சாட்சி:

நமக்குள்
இருக்கும்
மவுனம்தான்
நம் காதலுக்கு
சாட்சி.

தடயம்:

இன்று
கவிதை கூட
எழுத தோன்றவில்லை
உன்முகம்
காணாததால்...

மாயம்:

கண் தெரிகிறது
எனக்கு
ஆனால் - நீ
மட்டும்தான்
தெரிகிறாய்...

நினைக்கமாட்டாயா?:

ஒவ்வொருமுறை
விக்கல்
வரும்போதும்
வேண்டிகொள்வேன்.
என்னை
நினைப்பது
நீயாக இருக்க
வேண்டும் என்று.

காதல்:

உன்னை
காதலிக்க நீ
தேவையில்லை
உன்
நினைவுகள்
மட்டும் போதும்.

மண்வாசனை:

மேகங்கள்
மழைதுளியாய்
முத்தமிட - பூமிதாயின்
முதல் வெட்க்கம்
மண் வாசனை.

No comments: