Tuesday, December 7, 2010

எவனோ ஒருவன்:

நாடு முன்னேற
வேண்டும் என்று
எல்லாரும்
கனவு காண்கிறார்கள்
எவனோஒருவன்
கனவை
நினைவாக்க வேண்டும்
என்று.

வரமா? சாபமா?:

இறைவா
நான் முன்
பிறவியில்
என்ன பாவம்
செய்தேன்
என்னை
காதலிக்க வைத்து
விட்டாயே.

கடைசி நாள்:

நம் வாழ்க்கை
ஒரு முறைதான்,
எத்தனை
நாட்களாக
இருந்தாலும்
பரவாயில்லை
கடைசி நாள்வரை
சந்தோஷமாக
வாழ வேண்டும்.

புதியது:

கண்ணுக்கு
தெரியாத
கவிதை
"காற்று"

கிரீடம்:

தோல்வியை
இதயத்தில்
தாங்கினால்தான்
வெற்றியை
தலையில்
சுமக்க முடியும்.

குழந்தைதனம்:

மழைதுளிகளை
சுமந்து
கொண்டிருக்கும்
மரகிளையை
அசைத்து
மழைபெரும்
மனிதனின் வயது
எத்தனை ஆனாலும்
அவன் அப்போது
குழந்தைதான்.

புனித நீர்:

பிறருக்காக
சிந்தப்படும்
கண்ணிரை விட
புனிதமான
நீர்
இந்த உலகில்
வேறு எதுவும் இல்லை.

கிறுக்கல்:

சிறு குழந்தை
வரைந்த
அழகான
ஓவியம்
கிறுக்கல்.

பெருந்தன்மை:

உதிர்த்த
பூக்கள்
ஒருபோதும்
மணம் வீச
தவறுவதில்லை - தான்
வாடும்வரை.

சம்மதம்:

என் காதல்
நிறைவேற வேண்டும்
என்றுதான்
நித்தமும்
நினைத்து கொண்டிருக்கிறேன்.
எங்காவது சுவரில்
இருக்கும்
பல்லி சம்மதம்
சொல்லாதா
என்று.

ஏக்கத்துடன்:

தும்மல் வரும்
வேளையில்
நிறைவேறாத
ஆசைகளையெல்லாம்,
சொல்லிகொள்வார்கள்.
ஏழைகள்.
ஒருவேளை
நிறைவேறிவிடாதா
என்று.

நிழலுக்கு நிழலில்லை:

பாவம்
வெயிலிலும்,
நிழலுக்கு
மட்டும் தான்
நிழல் இல்லை.

மதிப்பு:

தோல்வி
இல்லாத
வெற்றிக்கு
என்றுமே
மதிப்பு கிடையாது.

தோல்வியும் வெற்றி:

ஒருவனுக்கு
சந்தோஷம் தரும்
நிகழ்வுதான் வெற்றி
என்றால்....
பிறருக்காக
அடையும் தோல்லிகூட
வெற்றிதான்.

தைரியம்:

இறக்கை
இருந்தால்
தடைகள் ஏதும்
இல்லை.
வானத்தில்
பறப்பதற்க்கு.

துணிச்சல்:

மரங்களும்
வானத்தை
தொட்டுபார்க்க
நினைக்கிறது போலும்.
வானத்தை நோக்கி
வளர்ந்து சென்று.

ஆசை:

என்
குழந்தை பருவ
ஆசை ஒன்று
உன்னை பார்த்தவுடன்
நிறைவேறிவிட்டது.
இறக்கைகள்
இன்றி
வானத்தில் பறந்து.

காதல் பிரிவு:

என்னை
கொஞ்சம் கொஞ்சமாக
நானே
கொன்று கொண்டிருக்கிறேன்.
உன்னை நினைத்து.

கவலை இல்லை:

கால்கள்
இல்லையென்று
என்றுமே கவலை
கொள்வதில்லை
பாதையில்
ஊர்ந்து செல்லும்
பாம்புகள்.

நட்பு:

ஒரு கை
தட்டினால்
ஓசை வரும்.
கைகொடுக்க
உண்மையாக
ஒருவர்
இருந்தால்.

No comments: