Thursday, December 16, 2010

மேகம்:

வான
காகிதத்தில்
மேக
ஓவியங்கள்.

உனக்காகத்தான்:

இன்றைய
விடியல் உனக்கு
சொந்தமானது - ஆம்
சூரியன் உதயமானதே
உன்னை
காணத்தான்.

எல்லாருடைய விருப்பம்:

எத்தனை
வயதானலும் - நீ
குழந்தையாகவே இரு
உன்னை
எல்லாரும்
விரும்புவார்கள்.

உறுப்படியாய்:

இறந்த
காலத்தை
நிகழ்காலத்தில்
நினைத்து
எதிர்காலத்தை
தொலைக்காதே.

சுய நலம்:

நீ விரும்பும்
எந்த ஒன்றையும்,
யாருக்காகவும்,
எதற்க்காகவும்
விட்டு கொடுக்காதே.
ஏனெனில் - நீ
வாழ போவது
இந்த ஒரு
வாழ்க்கைதான்.

கொள்கை:

ஆபத்தான
சுதந்திரத்தை விரும்பு.
என்றும்
பாதுகாப்பான
அடிமைதனத்தை
விரும்பாதே.

உண்மை:

இந்த
உலகில்
உண்மையான
பொருள் - இருள்.
அதனால்தான்
இருள்
கண்களுக்கு
தெரிவதில்லை.

மேகங்கள்:

அட...
தூரிகைகள்
இல்லாமல்,
யார் தீட்டியது
இந்த
அழகிய ஓவியத்தை.

என்றோ ஒரு நாள்:

உன் வாழ் நாள்
முழுவதும்
சிரித்துகொண்டு
இருக்கத்தான்
நீ
பிறந்தவுடன்
அழுது தீர்த்து
விட்டாய்...

ஒட்டுமொத்த வளர்ச்சி:

வீடுகள் தோரும்
என்று
வாசல்களுக்கு
கதவுகள்
அவசியமற்று
போகிறதோ அன்றே?
உலகின்
ஒட்டுமொத்த
நாகரீகமும்
வளர்ச்சியடைந்த
தினமாகும்.

துணிவு:

கடிகாரத்தில்
காலம் ஒரு
அடையாளமே
தவிர
அதற்க்கு
கட்டுபட்டது அல்ல.

விழிப்பு:

இன்றைய
விடியலுக்காக
நீ
என்ன செய்தாய்..
இன்று
விழித்திருக்கிறாய்...
இந்த
விடியலில்
ஏதாவது செய்.

சிறிய மரணம்:

ஒவ்வொரு நாள்
இரவும் சிறிய
"மரணம்" தான்
காலையில்
கண்விழிக்கும்
வரை....

உனக்காக...:

இரவு
முழுவதும் பயணம்
செய்து
காலம் கடந்து
காத்திருக்கிறேன்.
இன்றைய விடியல்,
உன் விழிகளின்
தரிசனத்திற்க்காக...

நல்ல காலமில்லை:

சாதனை
புரிவதற்க்கு
எந்த
நாட்களாக இருந்தால்
என்ன,
முயற்சியும்,
தன்னம்பிக்கையும்
தான் அவசியம்.

பரிணாமம்:

நேற்று
நீ
குழந்தை
இன்றைவிட.

எதிர்பார்ப்பு:

சுய நலமில்லாத
அன்பு என்றும்
உன்னிடம்
இருந்து
அன்பை தவிர
எதையும்
எதிர்பார்க்கவில்லை.

திருப்புமுனை:

எதிர்பாராத
சிறு
பயணங்கள்தான்
நம் வாழ்க்கை
பயணத்தில்
திருப்புமுனையாக அமையும்.

கால சக்கரம்:

காலத்தின்
கால்களை உடைக்கும்
சக்தி எனக்கிருந்தால்,
கண்டிப்பாக
சந்தோஷம் தரும்
சில நிகழ்வுகளை
இன்னும்
கொஞ்சம் காலம்
நீடிக்கவைப்பேன்.

முடியும்:

மனதை
என்றும்
மகிழ்ச்சியாக
வைத்துகொள்
வானத்தில் உன்னால்
பறந்து பார்க்க முடியும்.

No comments: