Monday, December 6, 2010

அழியா சுவடுகள்:

சாதி, மதம், இனம், மொழி,
ஏழை, பணக்காரன்,
வரட்டு கவுரவம்,
தற்பெருமை,
இறந்தகாலம்,
நிகழ்காலம்,
எதிர்காலம்,
வருத்தம், மகிழ்ச்சி,
சரி, தவறு
எந்த
தடைகளாலும்
அழிக்க முடியவில்லை
பாறைகளின் மீது
வாழ்ந்துகொண்டிருக்கும்
பல காதலை...

காதல் பத்தைரிக்கை:

என்
பெயரையும்,
உன் பெயரையும்
சேர்த்து
எழுதும்போதே
ஓராயிரம்
ஆண்டுகள்
வாழ்ந்துவிடுகிறேன்.
நீ
என் காதலியாக
இருக்கும் போதே.

கட்டாயம்:

எவனோ ஒருவன்
தோல்வியடைந்தால்
மட்டுமே
யாராவது
வெற்றிபெற
முடியும்.

நினைத்து நினைத்து பார்த்தேன்:

உன்னை
மறக்க நினைகிறேன்
ஆனால் நித்தமும்
உன்னை
நினைத்துகொண்டே
இருக்கிறன்
உன்னை
மறக்க வேண்டுமே
என்று.

மாயம்:

யாரென்று
தெரியாத போதே
உன்னை எனக்கு
பிடித்து விட்டது.
காரணம்
நான் இல்லை
"காதல்"

மனித உரிமைகள்:

என்னை
கொலை
செய்துகொள்ள
எனக்கே உரிமையில்லை.

கனவு காதல்:

என்னை
பிடிக்கவில்லை
என்ற
நீ
என் கனவில்
மட்டும்
ஏன் வருகிறாய்
காதல் சொல்ல.

தேவதை:

உலகில்
எத்தனை
பெண்கள்
இருந்தாலும்
யாராவது ஒரு
பெண்ணை
பார்க்கும் போதுதான்
வாழ்ந்துபார்க்க தோன்றும்
அவள் பெயர் தன்
"காதலி"

தீர்வு:

வாழ்க்கையில்
சரி, தவறு
என்ற இரண்டு
தேர்வுகள்
மட்டுமே எல்லா
முடிவுகளுக்கும்
முற்றுபுள்ளி வைத்து
முடித்துவைக்கிறது.

இறந்தகாலம்:

வாழ்க்கையில்
சில நிகழ்வுகள்
கண்களை திறக்கும்வரை
கனவுகள்
என்று
தெரிவதில்லை.

நிம்மதி:

பெண்கள்
இல்லாமல்
இருந்திருந்தால்
ஆண்கள்
எல்லாரும்
சந்தோஷமாகதான்
இருந்திருப்பார்கள்
மண்ணில்
பிறக்காமலே,
காதல்
செய்யாமலே.

உழைப்பின் விளைவு:

நாம்
கடந்து செல்லும்
சாலையின் தூரம்தான்
நம்க்கு தெரியும்.
அதற்க்காக
சிந்தபட்ட
வியர்வை
துளிகள்
நமக்கு தெரியாது.

அஞ்சா நெஞ்சம்:

யாருக்காகவும்,
எதற்க்காகவும்
தலை சாய்க்காத
ஒன்று உண்டு
என்றால் அது
கண்டிப்பாக
காலமாகத்தான்
இருக்க முடியும்.

வெற்றி:

வாழ்க்கையில்
வலி வேண்டும்
இல்லையெனில்
தீபட்ட
உடல்
கூட முழுவதும்
எரிந்துவிடும்.
நமக்கே தெரியாமல்.

விருப்பம்:

நல்லவன்,
கெட்டவன்
இருவருக்கும்
தேவையானது
சந்தோசம்
ஒன்று மட்டும் தான்.

கண்களால் கொல்லாதே:

நீ என்னை
திட்டும் போது கூட
மகிழ்ச்சியாகதான்
இருந்தேன்.
ஆனால் - நீ
மவுனம்
காத்தவுடன்
நான் மனம்
தளர்ந்து விட்டேன்.

எதிர்பார்க்கவில்லை:

உன்னை
பார்ப்பதற்க்கு
சில ஆண்டுகளுக்கு
முன்பு வரை
எனக்கு தெரியாது
உன்னை
பார்ப்பேன்,
காதலிப்பேன்
என்று.

ஊக்கம்:

என்னவள்
காலில் பட்டதால்
கொலுசு
கூட
சிரித்தபடியே
செல்கிறது
அவள்
கால்தடம்
பதிக்கையில்.

வாடாமல்லி:

செடிகளில்
இருந்து
பறிக்கபடும்
மலர்கள் சிறிது
நேரம் வாடாமல்
இருப்பதுவே,
கன்னிபெண்கள்
தலையில்
சூடுவார்கள்
என்ற
நம்பிக்கையிதான்.

என்றும் நடக்காது:

என் கனவில் கூட
நான்
ஒருபோதும்
இறந்ததில்லை
உனக்காக.

No comments: