Tuesday, December 7, 2010

காமெடி:

என்னவள்
என்னிடம்
கவிதையொன்று
கேட்டால் - நான்
சொன்னேன்
அவளது பெயரை.

சிறப்பிடம்:

வெற்றி,
தோல்வி
பட்டியலில்
சிறப்பு இடம்
"காதல்" தான்.

என் காதல்:

இரவினில்
தூக்கமில்லை
கண்களை
மூடியும்
கவிதை எழுதுகிறேன்
என் காதலை.

விளம்பரம்:

எவன் ஒருவன்
முழுமையாக தன்னை
விளம்பரபடுத்தி
கொள்கிறானோ,
அவனே
இன்று வெற்றியாளன்.

நீதி தேவதை:

பணக்காரர்களும்,
அரசியல்வாதிகளும்
குற்றங்களில் இருந்து
விடுபட லஞ்சம்
கொடுத்திருப்பார்களோ
கண்ணை கட்டிகொள்
என்று.
நீதி தேவதைக்கு.

ஒட்டுதுணி:

உடம்பை மறைக்க
துணீ இல்லை
இங்கு
ஏழைகளுக்கு - துணி
வீணாக பறந்து
கொண்டிருக்கிறது.
கொடிகம்பத்தில்
சுதந்திரம் என்று
சொல்லிகொண்டு.

பொது உடைமை:

உலகம்
பொது உடைமை
அதனால்தான்
என்னவோ பல
ஏழைகள்
பிளாட்பாரங்களில்.

வளர்ச்சிபாதை:

ஐந்தாண்டு
திட்டங்கள்
தேவையில்லை,
இனி சில
இடைதேர்தல்கள்
மட்டும் போதும்
என் நாடு
முன்னேற்றம் அடைய.

கலப்படம்:

உண்மையிலும்
கலப்படம்
செய்து விட்டார்கள்
பொய்யை சேர்த்து
புரணமைத்து.

கொலை:

தூய்மையான
காற்றையும்
கொலை செய்து
கொண்டிருக்கிறார்கள்
மரங்களை வெட்டி.

அமிலம்:

ஏழைகளின்
கண்ணீரை விட
வலிமையான
அமிலம்
வேறு எதுவும்
இல்லை.
சுட்டெரிக்க.

ஞாபகங்கள்:

ஒரே நேரத்தில்
நாலு திசைகளின்
தொலை தூரத்திலிருந்தும்
எனக்கு பிடித்த
பாடல்கள் கேட்கிறது.
உன்னை
நினைக்கும் போதெல்லாம்.

மங்கை:

மலர்களுக்கு
போட்டியாக
படைக்க பட்டவள்தான்
மங்கை.

இடமில்லை:

சொர்கத்தில்
இறைவனுக்கு
இடமில்லை
பூமியில்
எங்களை
படைத்து பாவம்
செய்த்தால்.
ஏழைகள்.

ஏக்கம்:

நடக்காத
நிகழ்வுகளில்
சில நிமிடங்கள்
வாழ்ந்து பார்க்க
படைக்க பட்டது தான்
கனவுகள்.

எதிர்பார்ப்பே சிறந்தது:

சில
நிகழ்வுகளின்
முடிவை
அடையும் போது
முடிவை
அடைய போகிறோம்
என்ற சந்தோஷத்தை விட
நிகழ்வு
முடிவுக்கு
வரபோகிறது
என்ற வருத்தம் தான்
அதிகமாக இருக்கும்.

வாழ்க்கை:

மனிதன்
போராடி
அடையும்
தோல்வி
மரணம்.

வரம்:

கடவுள்
மட்டும் அல்ல
மனிதனும்
மனம் இருந்தால்
வரம் தரலாம்.
பிறர் செய்த
தவறை மன்னிப்பதன்
மூலம்.

தனிமையின் விருப்பம்:

தனிமையும்
என்னை
விரும்புகிறது
நான் உன்னை
விரும்புவதால்.

ஒடுக்கம்:

ஒட்டுமொத்த
உலகத்திற்க்கும்
ஒடுக்கபட்டவனின்
குரல்
கேட்க வேண்டும்.

No comments: