Wednesday, December 1, 2010

ஊர்வலம்:

எதையோ வற்புறுத்தி
ஊர்வலமாய்
சென்றுகொண்டிருந்தது
எறும்புக் கூட்டங்கள்.
ஒருவேளை
ஒற்றுமையையோ?

எழுதுகோல்:

என் வாழ்க்கையை
திருத்தி எழுதிய - பென்னை
முதன்முதலில்
பார்த்தபோது - கையில் பிடித்து
எழுததொடங்கினேன்
என் பெயரை.

காமம்:

தொலைவிலிருந்த
என் காதலியின்
கண்களை ரசித்து
கொண்டிருந்த போது...
அவளது அனுமதியின்றி
அவளை
உரசிசென்ற காற்றை
அடைத்துவைத்தேன்
அன்புடன் என்
நுரையிரலில்.

போட்டி:

கதிரவனிடம்
போட்டி போட்ட - நிலா
ஒளிர முடியாமல்
தோற்றுப்போனது.
தேய்பிறையன்று.

உழைப்பு:

நாம்
தேடிபோகும்
இடத்திற்க்கு
உழைப்பால்
பாதை போட்டால்தான்
செல்லமுடியும்.

விடியல்:

இன்று
விடிந்துவிட்டது இரவு
ஆனால்
இன்னும் வெளிச்சம்
கிடைக்கவில்லை
ஏழையின் வீட்டில்.

இரவு:

இரவு கூட
உறவாகிபோனது
பகலில்
அடிகடி உறங்குவதால்.

ஆண்மை:

மரணத்தையும்
முத்தமிடுவேன்,
அவளது நினைவோடு
எமனிடமே யுத்தமிடுவேன்
அவளுக்காக.

நாணம்:

தொட்டவுடன்
சிணுங்கிவிட்டால் - நாணத்தில்
தொட்டாஞ்சினுங்கி.

ஆறு:

சிறுசிறு
மழைத்துளிகளை
அழைத்துசென்று - தற்கொலை
செய்துகொண்டது
ஆறு
கடலில் உப்பு நீருடன்
கலந்து.

இலையுதிர்காலம்:

கல்லூரியின்
கடைசி நாட்கள்
எங்கள் பிரிவை
தாங்கமுடியாமல்
கண்ணீர்வடித்தது
நாங்கள் வைத்த மரம்
இலைகலை
உதிர்த்துகொண்டு...

கல்:

கல்
சிறிப்பியிடம்
உளியால் வாங்கும்
அடியையும் பொருத்து
கொண்டது - சில
நிமிடங்களில்
தானும்
கடவுள்
என்பதாலோ?

பழி:

நாம்
காலால்
மிதித்த வலியை
மவுனமாய்
பொருத்துகொண்டதால்
பழிசுமத்திவிட்டோம்
முள் குத்திவிட்டதென்று.

வலி:

வலிகூட
சுகமாகத்தான்
இருக்கிறது
என் காதலை
மறுத்த உன்னால்
மறைக்க முடியாத
உன் நினைவுகளால்...

துரோகம்:

நன்றிக்காக
சிலை வைத்த
மக்களுக்கு துரோகம்
இழைத்தது
பொய்த்துபோன
பருவமழை.

நட்பு:

கடைக்கடையாய்
தேடியலைந்தேன்
பூவிற்க்காக - கடைசியில்
அவளிடம் கிடைத்தது
நட்பு.

நண்பன்:

எங்கோ பிறந்த
எங்களுக்கிடையில்
மனமாற்றம் - வகுப்பறையில்
நண்பர்களாக நாங்கள்.

அழுகை:

பிரசவத்தில்
அன்னையின்
வலியறிந்து
பிறந்தவுடன் அழுதது
மழழை.

கண்ணீர்:

வயலில்
வாடிகிடக்கும்
பயிர்களைப்பார்த்து
மழைபெய்தது - உழவனின்
கண்களில்.

ஒற்றுமை:

பல நாட்டின்
நதிகள் கூட
ஒற்றுமையாய் இருக்கிறது
கடலில் கலந்து - அதையும்
பிரித்துவிட்டார்கள்
மனிதர்கள்
ஏழுகடலென.

பலம்:

தோல்விதான்
பலம் என
உணர்ந்தேன்
வாழ்க்கையில்
வெற்றிபெற்ற பின்பு.

பசி:

தனி ஒருவனுக்கு
உணவில்லை என்றால்
உலகத்தை அழித்திடலாம்.
யார் அழிப்பது?
பசியால் சுருண்டு கிடப்பவனா
அல்லது பணமுடையவனா?

சதி:

தமிழுக்காக
போராடுபவர்களின்
பட்டியலில் முதலில்
கையெழுத்திட்டான்
அவன்
ஆங்கிலத்தில்.

ஆசிரியர்:

ஏனோதானோ
என் என்னை
படைத்துவிட்ட பிரம்மன்
என் ஆசிரியரிடம்
தோல்வியுறுவான்
வாழ்க்கையை
வகுப்பாக
எடுக்கமுடியாமல்.

விதி:

மதியால்
தான் செய்த
சதியால்
மாட்டிகொண்டு
சொன்னான்
எல்லாம்
"விதியால்"


No comments: