Thursday, December 16, 2010

அதிசயம்:

உலகத்தின்
முதல் அதிசயம்
அன்பு.

சாதனை:

நீ
சாதனை
புரிவதற்க்காக
உனக்கென்று
தனியாக
சிவப்பு கம்பளம்
விரித்து
வரவேற்க்காது
இந்த
சமுதாயம்.

தன்னம்பிக்கை:

அமாவாசை
இரவு அன்றும்
நிலா தெரியும்
ஆனால்,
கறுப்பாக தெரியும்.

இருப்பதைகொண்டு:

உன்னிடம்
என்ன இருக்கிறதோ
அதை கொண்டு
உன்னிடம்
இல்லாததை
பெறு.

தேவதை:

உன் அனுமதி
கிடைக்காமல்,
சொர்க்கத்திற்க்கு
சென்ற,
காற்றுக்கள்
எல்லாம், தன்
துர்பாக்கியத்தை நினைத்து
தன்னைதானே,
எரித்துகொண்டு
உன் பொற்பாதங்களை
சரணடைய வருவதுதான்
மழைத்துளிகள்.

வேறுபாடு:

உன் பாதங்கள்
படாததால்தான்
பெண்ணே,
மண்ணில்
இத்தனை
வேற்றுமைகள்.

உண்மைகாதல்:

காதல்,
காமம்
இல்லாதது.

உன்னைத்தான்:

உன்னை
மறந்துவிட்டு
யாரையோ
தேடிகொண்டிருக்கிறேன்.
ஆனால்,
நான்
தேடிகொண்டிருப்பது
வேறு யாரையும் இல்லை
உன்னைத்தான்.
எனக்கே தெரியாமல்
நான் தேடிகொண்டிருப்பது
உன்னை மட்டும்தான்.

புதிய சட்டம்:

சட்டம்
தொடங்கும்
இடமும்,
முடியும் இடமும்
ஒன்று போலவே
இருக்க வேண்டும்.

சோதனை:

உண்மையை
பிரதிபலிக்க
இரு கண்களும்,
ஒரு உதடுமே போதும்.

அட....ச்சி:

கிடைச்சிருச்சி...
கிடைச்சிருச்சி...
சுதந்திரம்.
இந்தியாவுக்கு
சுதந்திரம்
கிடைச்சிருச்சி....
அட.....ச்சி
கனவு.

மவுன தீ:

உன் மவுனமே
என்னை
எரித்துவிடும்
போலிருக்கிறது
தீ ஏதும்
இல்லாமல்.

வித்தியாசம்:

எல்லா
நாட்களும்
சூரியன்
ஒரே மாதிரிதான்
உதயமாகிறது.
ஆனால்,
எல்லா
நாட்களும்
ஒரேமாதிரி
இருப்பதில்லை.

நினைவலைகள்:

சில
விஷயங்கள்
கனவென்று
தெரிந்தும்...
சில
நிமிடங்கள்
வாழ்ந்துபார்க்க தோன்றும்.

இன்றைய கல்வி:

கற்றுக்
கொள்வதற்குதான்
படிக்க வந்தேன்...
படிக்கதான்
கற்று
கொடுக்கிறார்கள்.

பார்வை:

கவிஞன்
வறுமையையும்
கவிதையாகத்தான்
பார்ப்பான்.

சுதந்திரம்:

சுதந்திர தினத்தன்று
சுதந்திரமாய் யாரும்,
சுதந்திரத்தை
கொண்டாடுவதில்லை
பள்ளி குழந்தைகள்
கூட...

புரட்சியாளன்:

எரியும்வரை
மட்டும்
போரளி - தலைவன்.

இதயமாற்றம்:

எனக்காக
துடித்துகொண்டிருந்த
என் இதயம்
உன்னை பார்த்தவுடன்
உனக்காக துடிக்க
ஆரம்பித்துவிட்டது.

முட்டாள் அறிவாளி:

திறமை
கொண்டிருப்பவன்
முட்டாள்தான் - தன்
திறமையை
வெளிகொண்டுவரும்
வரையிலும்.

No comments: