Tuesday, November 30, 2010

மனிதன்

மனிதன்
என்பவன்
இந்த சமுதாயத்தில் நிகழும்
அனைத்து கொடுமைகளையும்,
அழிக்கா விட்டாலும்
தன் கண் முன் நிகழும்
ஒரு சில
கொடுமைகளையாவது
அடியோடு அழிப்பவனே
உண்மையான மனிதன்.
எனவே,
நான் மனிதன் அல்ல.
நான் மனிதனாகும் போது
இந்த உலகத்தில்....?

அன்னை

படைத்தவனின்
நம்பிக்கையே
பாழாய் போனது
மனிதர்களிடம்...
எந்த நம்பிக்கையில்
என்னை சுமந்தாய்,
சுகமாய்....
கருவறையில்

அம்மா

என்(தன்) நம்பிக்கை
பெரியதல்ல
என்பால்
தெரியாமல் - அன்பால்
அடைகளம் கொடுத்த
அன்னையின்
அன்பை விட...

நம்பிக்கை

மனிதன்
தன்னை கூட
முழுமையாக நம்பவில்லை
நினைவுகளனைத்தும்
கையேட்டின்
பக்கங்களில்....

கனவுகள்

கட்டளையிட ஆட்கள் இல்லை
தரசான்றிதல் வாங்கவில்லை
வெற்றிகரமாக
ஓடி கொண்டிடுக்கின்றது
விழித்திரையில்
கனவுகள்.

த(க)ண்ணீர்

தண்ணீர்...தண்ணீர்...
போராடிகொண்டிருக்கின்றனர்
கண்ணீரை
வீணடித்து கொண்டு...

சட்டங்கள்

அனுமதி
மறுக்கபடுகிறது
உயிருக்காக போராட
மீறினால்
அனுமதி மறுக்கபடும்
உயிர்வாழ
ஏழையின் சட்டங்கள்.

மறதி

சுவாசிக்க
தவறிவிட்டது
நுரையிரல் - மரணம்
வயதானதால்
மறதி.

காதல்

கண்ணிமைக்கும்
நேரத்தில்
இதயத்திற்க்குள்
இன்ப இடி
மனதிற்குள்
காதல்.

சவால்

யார் சொன்னது?
கடந்த காலம்
திரும்பாது என்று
அவளை பார்த்த
ஒவ்வொரு நொடியும்
தினம்தினம்
திரும்பிகொண்டிருக்கிறது
நினைவுகளாய்....

முன்னேற்றம்

உயிர் போய்
கொண்டிருக்கிறது.
ஏழைகளின் வீட்டில்
நாடு முன்னேறிகொண்டிருகிறது.
பாதுகாப்பில்...

விளம்பரம்

சுவரொட்டியில்
விளம்பரம் செய்யவில்லை
மவுனமாய்...
வறபுறுத்தி சென்றது
மின்சாரத்தை சேமிக்கசொல்லி..

பயணம்

கண்ணிமைக்கும்
நேரத்தில் சுற்றுபயணம்
வேற்றுகிரகம் வரை..
சுமந்துகொண்டு விட்டது
மன ஊர்தி...

கவிஞன்

சில
வினாடிகள்
உன்னை நினைத்து
பேனாவால் கிறுக்கினால் கூட
கவிதையாகிறது - உன்னால்
நானும் கவிஞனாகி விட்டேன்.

விசாரனை

யார் சொன்னது?
உயிரற்ற பொருட்களுக்கு
உயிரில்லை என்று - அவளை
பார்த்தபின்பு
ஒவ்வொன்றாய்
நலம் விசாரிக்கிறது
என்னிடம்.

முக்காடு

நாளைய
விடியலுக்காக
இருட்டிற்க்கு வெள்ளையடியுங்கள்
என்றால்
வெளிச்சத்திற்க்கு
முக்காடு அணிவிக்கின்றனர்
அரசியல்வாதிகள்.

அழகு

அழகு அழகான
பொருட்களில் இல்லை
பார்ப்பவரின் கண்களில்
ரசிப்பவரின் மனதினில்.

திருத்தம்

தனக்கு தேவையான
தவறுகளை சரியானவையாக
திருத்திகொள்கிறார்கள்
சுய நலத்திற்காக
மனிதர்கள்.

பொது நலம்

விழிகள் இருந்தும்
பார்வையற்றவர்களாக
இருக்கிறார்கள் - சூரியன்
எரிந்துகொண்டிருக்கிறது
பொது நலத்திற்காக...

மறை(று)ப்பு

திறமைகள்
மறைக்கபடுகிறது
சில நேரங்களில்
சந்தர்ப்பத்தாலும், சூழ் நிலையாலும்
ஆனால், மறுக்கபடுவதில்லை.

நிலா

குழந்தைக்கு உணவூட்ட
பெற்றோர்கள்
முயன்று கொண்டிருக்கையில்
மவுனமொழியால்
தேடிகொண்டிருந்தது
தன் நண்பனை
அமாவாசையன்று.

உனக்காக

உன்னை நினைக்கும்
ஒவ்வொரு நொடியும்,
என்னை நான்
மறந்து கொண்டிருக்கிறேன்.
என்னை நினைக்கும்
ஒவ்வொரு நொடியும்
உன்னை மட்டும்தான்
நினைத்து கொண்டிருக்கிறேன்.

முயற்சி

பள்ளங்களை கூட
பாதைகளாக
மாற்றி ஓடி
கலக்கிறது
ஆறு - கடலில்.

காலங்கள்

நிகழ்காலத்தில்
எதிர்காலத்தில் கனவுகள்
இறந்த காலத்தின்
நினைவுகளாய்...

வறுமை

வயிறு எரிகிறது
பொறாமையல்ல
வறுமை.

எப்பொது?

பசி, பட்டினி
ஏழையின் சிரிப்பில்
இறைவனை காணலாம்
எப்போது?.

படிகம்

அடிதடி,
அடைக்கபட்ட ஆசைகள்
மனதிற்க்குள்.
கனமான கல் நெஞ்சம்
அதனால்தான் - மனிதன்
பூமியில்
படிந்துவிட்டானோ?

வாழ்க்கை

உன் வாழ்க்கை
சாலையில் நீ
பயணிக்காவிட்டாலும்,
திசை மாறிகொண்டேதான் இருக்கும்
உன் நிழலை போல.

No comments: