Sunday, November 28, 2010

என் தேவதை...

இந்த
தருணம்கூட
நான்
இறந்து விடுகிறேன்
ஏனெனில் - நான்
என்
பிறவிபலனை
அடைந்துவிட்டேன்.
இறைவா,
நீ
படைத்த
என் தேவதையை
கண்களில் பார்த்து.

ஆனால்
நான்
இறக்கவிரும்பவில்லை.
நீ
படைத்த
இந்த தேவதையை
என் வாழ்வில் - நான்
தவறவிட்டேன்
என்றால்
நரகத்தில் கூட
அனுமதி மறுக்கப்படும்
எனக்கு.

நடமாடும்
என் தேவதையை
பார்க்கும் என்
கண்கள்
அனிச்சையாக கூட
இமைகளை
மூட மறுக்கின்றன..

உறங்கவும்
இல்லை ஆனால்
பகலிலும்
கனவு போல்
இருக்கிறது
இந்த நிமிடங்கள்.

மனிதனால்
பறக்கவும் முடியும்
என உணர்ந்தேன்
சில
தேவதைகளை
பார்க்க நேரும்
போதெல்லாம்,

நியூட்டனின்
மூன்றாம் விதி
இங்கே
இந்த தருணங்களில்
நினைவுக்கு
வருகிறது.
நான்
பார்க்கும் போது
நீ
என்னை
எதேற்ச்சையாக கூட
பார்க்காமல்
போனதால்..

ஐன்ஸ்டீனின்
கூற்று மட்டும்
அர்த்தமுள்ளதாகிறது
உன்னருகில் - நான்
இருக்கும் போது
காலங்கள்
கடத்தபடுவதால்...

தொலைதூரத்தில்
நான்
இருந்த போதிலும்
உடலைவிட்டு - என்
உயிர் பிரிந்து சென்று
உன்னருகில் தான்
இருக்கிறது...

உன்
மூச்சுக்காற்றுக்கூட
காற்றோடு கலந்து
கவிதையாகத்தான்
வந்தடைகிறது
என்னிடத்தில்
வரும்போது...

எனக்கு
கண்கள்
தெரிகிறது என்பதை
நான்
நம்புகிறேன்
இருந்தாலும்,
சந்தேகமடைகிறேன்...

தென்றல்
சுகமானது தான்
இருந்தாலும் - அதனை
சிறைபிடிக்க
நினைக்கிறேன்,
உன் உடலோடு
உரசிசெல்லும்போது
உனக்கு
வலியை
உண்டாக்கி இருக்குமோ
என்ற
சந்தேகத்தினால்...

செடியிலிருந்து
பறிக்கபடும் - பூக்கள்
கொஞ்ச நேரத்தில்
வாடிவிடும்
என்பார்கள் - ஆனால்
உன் தலையில்
இருப்பதால்
என்னவோ
உற்ச்சாகமாகத்தான்
இருக்கிறது.

என்
இதயம்
நீ
என்னை
திரும்பிபார்க்கமாட்டாய,
என்றுதான்
நித்தமும் நினைத்து
துடித்துகொண்டிருக்கிறது...

உன்
கண்கள் பேசும்
பாஷயை
மொழிபெயர்த்தாலே
காகிதம் முழுவதும்
கவிதையாய்
நிரம்பிவழிகிறது.
வேறு வழியின்றி
இருக்கையில் - பல
கவிதைகளை
காற்றுக்கு
கடன் கொடுத்துவிடுகிறேன்
உன்னை
சரணடைவதற்க்காக...

எத்தனை
சப்தத்திலும்
உன் மவுனம்
மட்டும் தான்,
என் செவிகளை
வந்தடைகின்றன...

தொலைதூரத்தில்
இருப்பவர்கள்தான்
உரக்க கத்துவார்கள்
வார்த்தைகளை
வழியனுப்பி,
உண்மையான அன்பு
இல்லாததால்
உன் மவுனம் -
மவுனமுமே
நம் மனதின்
ஒற்றுமைக்கு
சாட்சியாகிறது...

உன் சிரிப்பில்
பூக்கள்
சிரிப்பதை
காண்கிறேன்
முதன்முதலாக...

என்
ஆசைகளை
எல்லாம்
துரந்துவிடுகிறேன்
நீ மட்டும்
என்னோடு
எனக்காக
இருந்துவிடுவாய் என்றால்...

உன்
பாதங்கள் பட்டதால்
காலடி மண்கூட
கடவுளாகலாம்
ஒரு காலத்தில்...

கடவுள்
ஒருவேலை
பெண்ணாக
இருந்தால்
பொறாமையில்
தற்க்கொலை
செய்துகொள்ளும்,
இப்படி
ஓர் அழகியை
படைத்துவிட்டோமோ
என்று...

நீ
கொண்டாடும்
சந்தோஷங்கள்,
சிறு
குழந்தையின்
மகிழ்ச்சிக்கு
இணையானது.
எல்லாருடைய
மனதையும்
கொள்ளைகொள்வதால்...

நீ
வானத்தை பார்த்து
நடக்கும் போது
பயமாய் இருக்கிறது - எனக்கு
எங்கே சூரியன்
பனிகட்டியாய்
மாறிவிடுமோ
என்று...

உன்
கூந்தலில் - நீ
சூடுயிருக்கின்ற
பூக்களில்
தேன் திருட வந்த
தேனிக்களும்,
திருந்திவிட்டது.
திருடுவதை
நிறுத்தி....

உன்னை
பகலில்
பார்க்கமுடியாததால்தான்
இரவில் - நிலா
தேய்ந்துகொண்டே இருக்கின்றது.
எப்படியும்
பார்த்துவிடுவோம்
என்ற சிறு
நம்பிக்கையில் தான்
மீண்டும்
வளர்ந்துவிடுகிறது.

மஞசள்வெயில்
மழைவரும் தருணம்
நீ மட்டும்
உன்
முகத்தை
வானத்திற்க்கு
காட்டாதே - மீறினால்
வானவில்லும்
உன்
அழகில் மயங்கி
உடைந்து போய்விடும்.

உன்னை
பார்ப்பேன் என்று
நான்
பிறக்கும் போதே - எனக்கு
தெரிந்திருந்தால் - நிச்சயம்
அழுதிருக்கமாட்டேன்,

என்னுயிரை
எடுக்க எமன்
வந்தாலும்,
சற்றே யோசிப்பான்,
தான் ஏன்
மண்ணில்
பிறக்கவில்லையென்று...

நீ
மண்ணில்
இருக்கும்
நாட்களனைத்தும்
திருவிழாதான்
அதனால்தான்
வானம் இரவை
அலங்கரித்துள்ளது
நட்சத்திரங்களை
கொண்டு....

கடல் நீரும்
உன்னைபார்க்கத்தான்
ஆவியாக வருவதால்தான்
நீ
வசிக்கும்
இடத்தில் அடிக்கடி
மழை பெய்கிறது...
மழைதுளிகள்
உன்னை
நனைக்காததால்
மனமுடைந்துதான்
மரணமடைகிறது
சாக்கடையுடன் கலந்து...

மழைகாலங்களில்
உனக்காகத்தான்
குடைபிடிக்கின்றன
சின்னசிறு
காளாண்கள்
தன்
உருவத்தை
அறியாமல்...

இந்த
பூமி
நீ வசிக்கும்
இடத்தில்
உன்னை
பார்க்கத்தான்
தன்னைதானே
சுற்றிகொண்டிருக்கிறது.
இரவுபகலென...

கல்தோன்றா,
மண்தோன்றா
காலத்தில் மொழி
பிறந்திருக்க வாய்ப்பில்லை,
காதல்
தோன்றிய காலத்தில்
கவிதை எழுதவேண்டும்
என்ற
கட்டாயத்தினால் தான்
உருவாகியிருக்க முடியும்...

மண்ணிற்க்குள்
இருக்கும் - விதைகூட
காற்றின் மீதிருக்கும்
காதலால்தான்
வானத்தை
எட்டிபார்க்கின்றன
மண்ணிடம்
முட்டிமோதிகொண்டு...

No comments: