Wednesday, November 24, 2010

வளர்ச்சி:

அட,
என்ன ஆச்சரியம்
ஆடையின்றி அரைகுறையாய்,
வளர்ந்த பரிணாமம்
முழுமையாய்
வளர்ந்து நிற்க்கிறது
ஆயுதம் ஏந்தி.

மின்வெட்டு:

மனதிலிருந்த அவளை
வரைவதற்க்காக - இடம்
தேடி கொண்டிருக்கையில்
மின்வெட்டு - அவசர
அவசரமாக வெள்ளையடித்தேன்
இருட்டிற்கு - அவளை
வரைவதற்க்காக.

குறை:

எங்கோ இருந்தவனை
குறை கூறிகொண்டிருக்கையில்
என் பிம்பம்
தலைகுனிந்தது.
கண்ணாடியில்.

தேசபற்று:

கண்ணீமைக்காமல்
தேசபற்றை உணர்த்தினான்
இந்தியாவும், பாகிஸ்தானும்
விளையாடிய கொண்டிருந்த
மட்டைபந்தை
பார்த்துக்கொண்டே
ஐந்தாறுமுறை - புகைபிடித்து.

சிகரெட்:

மரணமடையும்முன்
சிறிதுசிறிதாய்
எரிந்து கொண்டிருந்தான்
அவன் கையில்
வைத்திருந்த
கொல்லியால்...

வழிகாட்டி:

புத்தகத்தின் பக்கங்களின் மீது
உறங்கி கொண்டிருக்கும் வேளையில்
கண்களின் இமைகளுக்குள் கனவு...
வாழ்க்கை பாதையில் வழிகாட்டி யாரோ?
பிரம்முடன் தோன்றும் தந்தை
திடுக்கிடெழுந்து திட்டிகொண்டே
புரட்டிபார்த்தேன் - தலைகீழாய்
புத்தகத்தின் பக்கங்கள்.

ரசிகன்:

உயர்வுக்கு
உதாரணமாய் இரு - இல்லை
தாழ்வுக்கு
விதிவிலக்காவது இரு
உன்னை பார்த்து
திருந்தட்டும்
எவனோ ஒருவன்.

சாட்டையடி:

நடந்தே போட்ட
நாகரீகமான
சாலையிலிருந்து - எறும்புகள்
புன்னகைத்ததில்
தலைகுனிந்தது
அரித்துப்போன
நம் நாட்டு சாலை.

மழை நீர் சேகரிப்பு:

சொட்டு சொட்டாய்
ஒழுகி கொண்டிருந்தது - நீர்
தெருகுழாயில்
அருகில் சென்றுகொண்டிருந்தார்கள்
மழை நீரை சேமிக்க சொல்லி.

தவறுகள்:

யாருக்கும்
தெரியாமல்
கைவைத்தேன்
சுட்டது - தீ
மனதினில்...

கவிதை:

ஒன்றரை
வயதிலேயே - நான்
கவிஞனாகி விட்டேன்
"அம்மா"
என்றதால்.

அனுபவம்:

மழலையில்
கைப்பிடித்து - நடக்க
கற்றுகொடுத்த
அன்னையின் கைப்பிடித்து
நடந்தான்
முதியோர் இல்லத்திற்கு.

பாசம்:

வெற்றியை
என்றும் தேடி
கொண்டிருக்கும்
மனிதர்களுக்கிடையில்,
தன் தோல்வியை
எதிர்பார்த்து கொண்டிருந்தாள்
அன்னை தன்
குழந்தையிடம்
விளையாடும் போது.

ஆசை:

தேவைக்காக
இருந்த
ஆசைகள் இன்று,
ஆசைக்காக தேவைபடுகிறது.

நிம்மதியான மரணம்:

காலையில்
கண் விழிப்போம்
என்ற
நம்பிக்கையில் - படிக்கையில்
இறந்ததுக்கூட
தெரியாமல்
உறங்கி கொண்டிருந்தான்.
நிம்மதியாய்

சாக்குபோக்கு:

வகுப்பிற்க்கு
தாமதமானதால்
சில நிமிடங்கள் - பூமியை
பின்னோக்கி
சுற்ற வைத்தேன்
கடிகாரத்தில்..

உண்மை காதல்:

இளமையில்
பூக்களின் மணத்தை
ரசித்தேன் - வயதானபின்
பூக்களை ரசிக்க
தொடங்கினேன்.

காலணி:

உழைத்து உழைத்து,
தேய்ந்துப்போன
காலணியை
ஒதுக்கிவைத்தான்
வீட்டைவிட்டு
சோம்பேறி.

உண்மை:

நீ
செய்த தவறு
உலகிற்க்கு
தெரியவில்லை
என்றாலும்,
உனக்கு தெரியும்
நீ செய்தது
தவறு என்று.

வித்தியாசம்:

வானத்திலிருந்து
விழுவதால் - தண்ணீர்
மழை நீராகிறது.
மழை நீர்
மனிதன் மீது
விழுவதால்
கழிவு நீராகிறது.

கொண்டாட்டம்:

மனிதனின்
முதல் வெற்றியே
அழுகையால்தான்
கொண்டாடபடுகிறது.
பிறக்கும் போது.

தன்னம்பிக்கை:

கடலுக்கு
மட்டும்தான் எல்லை
கடற்கரை.
நிலத்திற்க்கு அல்ல.

சவால்:

நான்
எதிலெல்லாம் வெற்றிபெற
நினைத்தேனோ,
அதிலெல்லாம் - என்னை
தோல்வியடைய செய்தாய்...
நான்
இப்போது அனைத்திலும்
தோல்வியடைய
நினைக்கிறேன்.
இனிமேல்
தோல்வியடைந்து
வெற்றி பெறபோவது
நான் தான்
இனி என்னை
என்னசெய்ய போகிறாய்
விதியே..

உரிமை:

இந்த
உலகத்தை அழிக்கும்
அதிகாரம் - கொண்டவன்
பசியால் இருப்பவன்
மட்டும்தான்.

புதிய பாதை:

தனி ஒரு
மணலையும்,
கல் என்றுதான்
அழைப்பார்கள்
தன்னம்பிக்கையுடன்
தனித்து
நிற்க்குமேயானால்...

No comments: