Tuesday, December 7, 2010

கீற்றுகள்:

எந்தவொரு
செயலின்
வெற்றியும், தோல்வியும்
ஏதாவது ஒரு
நொடியில்தான்
தீர்மானிக்க படுகிறது.

வரம்வேண்டும்:

உன்னை
நினைத்து கொண்டிருப்பதற்க்காகவே
நான் நூறு
ஆண்டுகளாவது
வாழ வேண்டும் என்று
நினைக்கிறேன்.

முதன்மை:

கவிதை
தோன்றிய பிறகு
காதல் தோன்றியதா,
இல்லை - காதல்
தோன்றிய பிறகு
கவிதை தோன்றியாதா?

அறிவாளிகள்:

யாருக்கும்,
தெரியாத
சுலபமான
குறுக்குவழியை
பின்பற்றுபவர்கள் தான்
அறிவாளிகள்.

மரம் வளர்ப்போம்:

காலண்டரில்
தினசரி
கிழிக்கபடுவது
முடிந்து போன
நாட்கள் மட்டுமல்ல,
நம் நாட்டு
மரங்களும் தான்.

தேடல்:

எல்லாரும்
தேடிகொண்டிருக்கும்
சந்தோஷம்
எப்போது ஒரு
மனிதனுக்கு
கிடைகிறதோ?

மெழுகுவர்த்தி:

உலகின்
விடியலுக்காக
யாராவது ஒருவர்
எரிய நினைத்தால்
எரியும்வரை
குளிர்காய்ந்துவிட்டு
எழுந்து போய்விடும்
இன்றைய உலகம்.

தவறவிடுதல்:

எந்தவொரு
பொருளின் மீது
காதல்
கொண்டாலும் - அது
கிடைக்கவில்லை
என்றாலும் கூட
நேசித்தவர்கள்
தாங்கிகொள்வார்கள்.
காதலிக்கும் பெண்ணை
தவிர.

கனவு:

உன்னை பார்க்கும் போதெல்லாம்
உன் கைவிரல்
பிடித்து உன்னோடு
நடந்து செல்ல வேண்டும்
என்று தோன்றுகிறது.

விடியல்:

பல புரட்சிகரமான
கூற்றுகள் அனைத்தும்
இன்று
கூட்டங்களிலும்,
மேடை பேச்சிகளிலும்,
கைதட்டல்களிலுமே
முற்று பெற்று விடுகிறது.

விபத்து:

காலங்களில்
சில வினாடிகள்
மட்டும்
வஞ்சனை செய்துவிடுகிறது.
எதிர்பாராமல்
இருக்கும்போது
மனித வாழ்க்கையின்
அஸ்திவாரத்தையே,
அவர்களின்
சாதாரண பாதையிலிருந்து
அசாதரணமாக,
மாற்றிவிடுகிறது.

தலையெழுத்து:

எனக்கோ,
யாருக்கோ
ஏதாவது நிகழ
வேண்டும் என்று
தீர்மானித்திருந்தால்,
அந்த நிகழ்வு
எனக்காக
யாராளோ,
யாருக்காகவோ
என்னாலோ
வெற்றிகரமாக
முடித்து வைக்க படுகிறது.
விதியால்.

பசி:

எந்த்வொரு
அணுஆயுதமும்,
எந்தவொரு
ஏழையின்
பசியையும்,
பட்டினியையும்
தீத்துவைக்க முடிவதில்லை.

கனவு வாழ்க்கை:

யாரும் பின்
தொடராத,
அமைதியான
அழகான வாழ்க்கை
கனவு.

கீற்றுகள்:

ஒரு நொடியின்
சிறு கீற்றுகள்தான்
எல்லா செயல்களின்
முடிவுகளையும்
தீர்மானிக்கின்றன.

ஒரு மனிதனின் கனவு:

ஒரு மனிதனின் கனவு
இன்னமும் கூட
ஒரு வேலை
உணவாகத்தான் இருக்கிறது.

அடிமைகள்:

பணம் நமக்கு
அடிமையாக
இருக்க வேண்டும்.
நாம்
பணத்திற்க்கு
அடிமையாக
இருக்க கூடாது.

முற்றுபுள்ளி:

முடிவில்லா
பிரச்சனைக்கும்
நிரந்தர முற்றுபுள்ளி
வைக்கும்
சிறு சிறு
புன்னகைகள்.

என் அவள்:

உலகில்
முதலில்
தோன்றிய
வானவில் - என்னவள்.

ஆயுதம்:

உலகை
ஒழுக்குபடுத்த ஒர்
ஆயுதம் தேவை.
அதை எடுப்பது
இறைவானாக கூட
இல்லாமல்
இருக்கலாம்.

அடுத்த வினாடி:

எப்பவும்
சந்தோஷமாக
வாழ் வேண்டும்
என்று நீங்கள்
நினைத்தால்
எப்ப வேண்டுமானாலும்,
மரணமடைய
தயாராக
இருக்க வேண்டும்.

கற்பனை:

இல்லாத
நிஜத்திற்க்கு
பெயர்
கற்பனை.

மாற்றம்:

சாகனும் என
நினைத்த
போது கூட
நான்
சந்தோஷமாகதான்
இருந்தேன்

வாழனும்
என்று நினைத்தும்
இன்று
வறுத்தமாக
இருக்கிறேன் - நீ
என்னோடு
இல்லாததால்.

உனக்காகத்தான் காத்திருக்கிறேன்:

தனிமை மட்டும்
தனியாக
இருக்கும்போது
தனிமையில்
தனியாக
உட்கார்ந்து
நிஜங்களை
பிரிந்து தனியாய்
தவிக்கும்
நினைவுகளுடன்
நானும்
வாய்பேச முடியாமல்,
காது கேளாமலும்
காட்சிகளை மட்டும்
கண்களில்
பதிவு செய்துக்கொண்டு
யாருக்காகவோ,
எதற்க்காகவோ
காத்து கொண்டிருக்கிறேன்.
கவிதையாய் நினைத்து
கண்களில்
உன்னை சுமந்து.

வற்றாத நதி:

வறுமையிலும்
வளமாக
வருகிறது - கவிதை.

வேறுபாடு:

வாழ்க்கையொரு
கவிதை
அதை வாசிக்கும்
விதத்தில்தான்
எல்லாரும்
வேறுபடுகிறார்கள்.

தற்கொலை:

விரும்பி
செய்யும்
தற்கொலை
ஒருதலை
காதல்.

நல்லவன்:

உறங்கும் போது
மட்டும்
உலகில்
எல்லாரும்
நல்லவர்கள்.

அக்கறை:

என்
முன்னேற்றத்தில்
பெரிதும்
அக்கறை
கொண்டவர்கள்
என்னை
எதிரிகளாக
நினைப்பவர்களாகதான்
இருக்க முடியும்.

வானவில்:

வானவில்
என்றால்
ஏழு நிறங்கள்
இருக்கவேண்டும்
என்ற
நியதி ஏதும் இல்லை.
என்னவள்
போல்
இளஞ்சிவாப்பாகவும்
இருக்கலாம்.

மழைகாலம்:

மழைகால
தீபாவளி,
வான வேடிக்கை
கண்களில் மவுனமாய்
மின்னல்
எங்கேயோ
ஆர்பரிக்கும்
இசை கச்சேரி.

காதல் அழிவதில்லை:

காதலர்களுக்குள்
இருக்கும் காதலை
பிரிப்பதற்க்கு
காதலர்களுக்கே
உரிமை கிடையாது.

கவிதை:

எழுதி வருவது இல்லை
கவிதை
எழுத தோன்றுவதுதான்
கவிதை.

வளம்:

வறுமை மட்டும்தான்
நம் நாட்டில்
வளமாக வளர்கிறது.

உலக சுதந்திரம்:

உலகின்
ஒவ்வொன்றும்
ஒவ்வொருவருக்கும்
என்று சொந்தமாகிறதோ
அன்றுதான்
உலகத்திற்க்கு
சுதந்திரம் கிடைத்த
தினமாகும்.

ஆச்சரியம்:

உன்முகம்
காணத்தான்
தினமும்
உதிக்கிறேன்
சூரியன்.

சிறு சந்தோஷம்:

நான்
இப்போதெல்லாம்
அடிகடி உன்னிடம்
சண்டை போடுவதே
நீ
சண்டையிலாவது
என்னிடம்
பேசுகிறாய்
என்பதால் தான்.

வழிகாட்டி:

வெற்றியாளனின்
சிறந்த வழிகாட்டி
அவனது
தோல்விகளும்,
எதிரிகளும்தான்.

காதலன்:

சாதி, மதம்
எதுவும் எனக்கு
தெரியாது - உன்னை
மட்டும் விரும்பும்
சிறு குழந்தை நான்.

காரணம்:

எல்லாரும்
தான் செய்யும்
எந்தவொரு
செயலுக்கும்,
தனக்கும் தன்
செயலுக்கும்
சாதகமான ஒரு
காரணத்தை
உருவாக்கி கொள்கிறார்கள்.

காமெடி:

என்னவள்
என்னிடம்
கவிதையொன்று
கேட்டால் - நான்
சொன்னேன்
அவளது பெயரை.

சிறப்பிடம்:

வெற்றி,
தோல்வி
பட்டியலில்
சிறப்பு இடம்
"காதல்" தான்.

என் காதல்:

இரவினில்
தூக்கமில்லை
கண்களை
மூடியும்
கவிதை எழுதுகிறேன்
என் காதலை.

விளம்பரம்:

எவன் ஒருவன்
முழுமையாக தன்னை
விளம்பரபடுத்தி
கொள்கிறானோ,
அவனே
இன்று வெற்றியாளன்.

நீதி தேவதை:

பணக்காரர்களும்,
அரசியல்வாதிகளும்
குற்றங்களில் இருந்து
விடுபட லஞ்சம்
கொடுத்திருப்பார்களோ
கண்ணை கட்டிகொள்
என்று.
நீதி தேவதைக்கு.

ஒட்டுதுணி:

உடம்பை மறைக்க
துணீ இல்லை
இங்கு
ஏழைகளுக்கு - துணி
வீணாக பறந்து
கொண்டிருக்கிறது.
கொடிகம்பத்தில்
சுதந்திரம் என்று
சொல்லிகொண்டு.

பொது உடைமை:

உலகம்
பொது உடைமை
அதனால்தான்
என்னவோ பல
ஏழைகள்
பிளாட்பாரங்களில்.

வளர்ச்சிபாதை:

ஐந்தாண்டு
திட்டங்கள்
தேவையில்லை,
இனி சில
இடைதேர்தல்கள்
மட்டும் போதும்
என் நாடு
முன்னேற்றம் அடைய.

கலப்படம்:

உண்மையிலும்
கலப்படம்
செய்து விட்டார்கள்
பொய்யை சேர்த்து
புரணமைத்து.

கொலை:

தூய்மையான
காற்றையும்
கொலை செய்து
கொண்டிருக்கிறார்கள்
மரங்களை வெட்டி.

அமிலம்:

ஏழைகளின்
கண்ணீரை விட
வலிமையான
அமிலம்
வேறு எதுவும்
இல்லை.
சுட்டெரிக்க.

ஞாபகங்கள்:

ஒரே நேரத்தில்
நாலு திசைகளின்
தொலை தூரத்திலிருந்தும்
எனக்கு பிடித்த
பாடல்கள் கேட்கிறது.
உன்னை
நினைக்கும் போதெல்லாம்.

மங்கை:

மலர்களுக்கு
போட்டியாக
படைக்க பட்டவள்தான்
மங்கை.

இடமில்லை:

சொர்கத்தில்
இறைவனுக்கு
இடமில்லை
பூமியில்
எங்களை
படைத்து பாவம்
செய்த்தால்.
ஏழைகள்.

ஏக்கம்:

நடக்காத
நிகழ்வுகளில்
சில நிமிடங்கள்
வாழ்ந்து பார்க்க
படைக்க பட்டது தான்
கனவுகள்.

எதிர்பார்ப்பே சிறந்தது:

சில
நிகழ்வுகளின்
முடிவை
அடையும் போது
முடிவை
அடைய போகிறோம்
என்ற சந்தோஷத்தை விட
நிகழ்வு
முடிவுக்கு
வரபோகிறது
என்ற வருத்தம் தான்
அதிகமாக இருக்கும்.

வாழ்க்கை:

மனிதன்
போராடி
அடையும்
தோல்வி
மரணம்.

வரம்:

கடவுள்
மட்டும் அல்ல
மனிதனும்
மனம் இருந்தால்
வரம் தரலாம்.
பிறர் செய்த
தவறை மன்னிப்பதன்
மூலம்.

தனிமையின் விருப்பம்:

தனிமையும்
என்னை
விரும்புகிறது
நான் உன்னை
விரும்புவதால்.

ஒடுக்கம்:

ஒட்டுமொத்த
உலகத்திற்க்கும்
ஒடுக்கபட்டவனின்
குரல்
கேட்க வேண்டும்.