Monday, December 6, 2010

அழியா சுவடுகள்:

சாதி, மதம், இனம், மொழி,
ஏழை, பணக்காரன்,
வரட்டு கவுரவம்,
தற்பெருமை,
இறந்தகாலம்,
நிகழ்காலம்,
எதிர்காலம்,
வருத்தம், மகிழ்ச்சி,
சரி, தவறு
எந்த
தடைகளாலும்
அழிக்க முடியவில்லை
பாறைகளின் மீது
வாழ்ந்துகொண்டிருக்கும்
பல காதலை...

காதல் பத்தைரிக்கை:

என்
பெயரையும்,
உன் பெயரையும்
சேர்த்து
எழுதும்போதே
ஓராயிரம்
ஆண்டுகள்
வாழ்ந்துவிடுகிறேன்.
நீ
என் காதலியாக
இருக்கும் போதே.

கட்டாயம்:

எவனோ ஒருவன்
தோல்வியடைந்தால்
மட்டுமே
யாராவது
வெற்றிபெற
முடியும்.

நினைத்து நினைத்து பார்த்தேன்:

உன்னை
மறக்க நினைகிறேன்
ஆனால் நித்தமும்
உன்னை
நினைத்துகொண்டே
இருக்கிறன்
உன்னை
மறக்க வேண்டுமே
என்று.

மாயம்:

யாரென்று
தெரியாத போதே
உன்னை எனக்கு
பிடித்து விட்டது.
காரணம்
நான் இல்லை
"காதல்"

மனித உரிமைகள்:

என்னை
கொலை
செய்துகொள்ள
எனக்கே உரிமையில்லை.

கனவு காதல்:

என்னை
பிடிக்கவில்லை
என்ற
நீ
என் கனவில்
மட்டும்
ஏன் வருகிறாய்
காதல் சொல்ல.

தேவதை:

உலகில்
எத்தனை
பெண்கள்
இருந்தாலும்
யாராவது ஒரு
பெண்ணை
பார்க்கும் போதுதான்
வாழ்ந்துபார்க்க தோன்றும்
அவள் பெயர் தன்
"காதலி"

தீர்வு:

வாழ்க்கையில்
சரி, தவறு
என்ற இரண்டு
தேர்வுகள்
மட்டுமே எல்லா
முடிவுகளுக்கும்
முற்றுபுள்ளி வைத்து
முடித்துவைக்கிறது.

இறந்தகாலம்:

வாழ்க்கையில்
சில நிகழ்வுகள்
கண்களை திறக்கும்வரை
கனவுகள்
என்று
தெரிவதில்லை.

நிம்மதி:

பெண்கள்
இல்லாமல்
இருந்திருந்தால்
ஆண்கள்
எல்லாரும்
சந்தோஷமாகதான்
இருந்திருப்பார்கள்
மண்ணில்
பிறக்காமலே,
காதல்
செய்யாமலே.

உழைப்பின் விளைவு:

நாம்
கடந்து செல்லும்
சாலையின் தூரம்தான்
நம்க்கு தெரியும்.
அதற்க்காக
சிந்தபட்ட
வியர்வை
துளிகள்
நமக்கு தெரியாது.

அஞ்சா நெஞ்சம்:

யாருக்காகவும்,
எதற்க்காகவும்
தலை சாய்க்காத
ஒன்று உண்டு
என்றால் அது
கண்டிப்பாக
காலமாகத்தான்
இருக்க முடியும்.

வெற்றி:

வாழ்க்கையில்
வலி வேண்டும்
இல்லையெனில்
தீபட்ட
உடல்
கூட முழுவதும்
எரிந்துவிடும்.
நமக்கே தெரியாமல்.

விருப்பம்:

நல்லவன்,
கெட்டவன்
இருவருக்கும்
தேவையானது
சந்தோசம்
ஒன்று மட்டும் தான்.

கண்களால் கொல்லாதே:

நீ என்னை
திட்டும் போது கூட
மகிழ்ச்சியாகதான்
இருந்தேன்.
ஆனால் - நீ
மவுனம்
காத்தவுடன்
நான் மனம்
தளர்ந்து விட்டேன்.

எதிர்பார்க்கவில்லை:

உன்னை
பார்ப்பதற்க்கு
சில ஆண்டுகளுக்கு
முன்பு வரை
எனக்கு தெரியாது
உன்னை
பார்ப்பேன்,
காதலிப்பேன்
என்று.

ஊக்கம்:

என்னவள்
காலில் பட்டதால்
கொலுசு
கூட
சிரித்தபடியே
செல்கிறது
அவள்
கால்தடம்
பதிக்கையில்.

வாடாமல்லி:

செடிகளில்
இருந்து
பறிக்கபடும்
மலர்கள் சிறிது
நேரம் வாடாமல்
இருப்பதுவே,
கன்னிபெண்கள்
தலையில்
சூடுவார்கள்
என்ற
நம்பிக்கையிதான்.

என்றும் நடக்காது:

என் கனவில் கூட
நான்
ஒருபோதும்
இறந்ததில்லை
உனக்காக.

வெறுமை:

காதல்
எனக்கு பிடிக்காமலே
போய் இருந்திருக்கும்
என் காதலியே
உன்னை காணாமல்
இருந்திருந்தால்...

காதல்:

காலத்தின் ஒரு வினாடி
விபத்திற்க்குள்ளானது
எனக்கே தெரியாமல் - நீ
என்னில் வந்த
தருணத்தை மட்டும் - என்
இதயம் படம்பிடித்து
பத்திரபடுத்தியபோது...

சுய நலவாதிதான்:

நானும்
சுய நலவாதிதான் - என்
உலகம்
என் மக்கள்
எல்லாரும்
நல்லாயிருக்க வேண்டுமென்று
நினைப்பதால்...

சமாதனம்:

உன்னை
பார்க்கும் போதெல்லாம்
என் கண்கள்
சண்டை போடுவதை
நிறுத்தி கொள்கிறது.
இமைக்காமல்.

விதி:

ஆயிரம் முறை
வென்றவனுக்கும்,
பிறப்பு ஒருமுறைதான்.
பலமுறை
தோற்றவனுக்கும்
இறப்பு ஒருமுறைதான்.

முதல் அதிசயம்:

இயற்கை படைத்த
இவ்வுலகின் எந்த
அதிசயங்களை பார்த்தாலும்,
கவிஞர்களுக்கு
கவிதை எழுத தோன்றாது.
உன்னை ஒருமுறை
பார்க்க நேர்ந்தால்.

காரணம்:

கடற்கரையில்
காகிதத்துடன்
காத்திருந்தேன்.
நீ வரும்வரை
எனக்கு காரணம்
எதுவும் கிடைக்கவில்லை
கவிதை எழுத.

விடியல்:

இருள்
இருந்தால்தான்
வெளிச்சத்தை
அடையாளம்
காணமுடியும்.

தன்னம்பிக்கை:

மனிதனின்
நிழல் ஒன்றுதான் - இல்லை
சூரியன்
ஒன்றுதான் இருக்கிறது.

சோர்வு:

காலுடைந்து போய்
நிற்க்கும் கடிகாரம் கூட
தினமும்
இரண்டுமுறை
சரியாக
காலத்தை காட்டும்
மனம்(முள்)
உடையாமல்
நின்றிருந்தால்.

மறக்கமுடியாமல்:

உன்னை
மறக்க வேண்டும்
மறக்க வேண்டும்
என்று எண்ணி
தினமும்
ஆயிரம்
முறைக்கு மேல்
நினைத்து கொண்டிருக்கிறேன்
உன்னை
மறக்க முடியாமல்.

புதிய சட்டம்:

துன்பத்தில்
இருக்கும்போது
கண்ணீர்
சிந்த வேண்டும்
என்பது, சட்டம்
ஒன்றும் கிடையாது.
புன்னகையுடனும்
வாழலாம்.

நீ இல்லாததால்:

என் வாழ்க்கை
பகலாய்
இருந்தால் கூட
திசையை கண்டுபிடித்து
விடுவேன்.
சூரியன் உதிப்பதால்.
நீ
இல்லாததால்
என் வாழ்வே
திசைகள்
மறைந்த இரவாய்
போய்விட்டது.

விடை:

வாழ்க்கை
யாரோ எழுதிய
புத்தகமா என்ன?
சில பக்கங்களை
புரட்டிவிட்டு
கடைசி பக்கத்தில்
முடிவை
தெரிந்து கொள்வதற்க்கு.

நம் காதல்:

என்னை
பிடிக்காத
உனக்குள்ளும்,
உன்னை
பிடிக்காத
எனக்குள்ளும்
நமக்கு பிடித்த
பந்தம்
"காதல்"

வஞ்சபுகழ்சி:

நீ
என்னை
வெறுக்கிறாய்..
உன்னை
நான் வெறுத்து விடுவேன்
என்று.
ஆனால்,
உன்னை எனக்கு
பிடிப்பதே
நீ என்னை
வெறுப்பதால்தான்

மறைமுகம்:

நீ
என்னை
வெறுக்கிறாய்
காரணம் - உனக்கே
தெரியாமல் நீ
என்னை
விரும்புகிறாய்.

புதிய பார்வை:

என் வீட்டு
ரோஜா செடியில்
பூக்கள்
தெரிவதே இல்லை - எனக்கு
எல்லா
பூக்களிலும்
நீ மட்டும்
தெரிவதால்.

அடையாளம்:

ஒவ்வொரு
தோல்வியும்,
எவனோ ஒருவனுக்கு
வெற்றியை
பரிசலித்து விடுகிறது.

நான் யார்?:

நான்
சிந்திக்கிறேன் - நான்
ஏன் சிந்திக்கிறேன் - நான்
ஏன் என சிந்திக்கிறேன்
நான் சிந்திக்கிறேன்
நான் ஏன் என ஏன்
சிந்திக்கிறேன்?...

ஆசிரியர்:

இந்த
உலகில்
மிக சிறந்த
பயிற்சியாளர்
"தனிமை"

வாயிற்காவலன்:

நீ வரும்
பாதையில்
உன்னை வரவேற்க - நான்
வாயிலோடு வாயிலாக - நீ
என்னை தாண்டி
சென்றதுகூட தெரியாமல்...
காத்திருக்கிறேன்.

மழலைபோல்:

நான் உன்னை
பார்க்காத வேலையில் - நீ
என்னை பார்த்ததை,
நான் பார்த்துவிட்ட
தருணத்தில்
வகுப்பறையில்
சிறகுவிரித்து பறந்த
ஆயிரம்
வண்ணத்துபூச்சியையும்,
அடிமைபடுத்தி - நானே
ஆயிரம் பட்டாம்பூச்சியாய்
சிறகுவிரித்து பறந்தேன்.

ரகசியம்:

ஒவ்வொருவரும்
தான்
எதற்க்காக
மரணமடைகிறோம்
என தெரிந்துகொண்டு
மரணமடையவேண்டும்.

மலிவு:

என்
நாட்டில் மிகவும்
மலிவாக
கிடைக்கும் பொருள்
ஏழைகளின் உயிர்.

தகவல்:

என்னை
சுற்றியிருக்கும்
ஒவ்வொன்றும் - என்
எதிர்காலத்திற்கான
ஒரு தகவலை
சுமந்துகொண்டு
காத்திருக்கிறது.

தூண்டுதல்:

எனக்கு
தெரியாத - என்
வலிமையை கூட
என் எதிரிகள்தான்
எனக்கு
அறிமுகப்படுத்துகிறார்கள்.

கதா நாயகன்:

உலகில் அ நியாயங்கள்
கட்டவிழ்த்து விடும்போது
காலம் கண்டிப்பாக
அ ந்த அ நியாயங்களுக்கு
எதிராக ஒரு
கதா நாயகனை
உருவாக்கும்.

தவம்:

இன்று
இரவு முழுவதும்
கண்  விழித்து
காத்திருக்கிறேன்.
நாளை
சில நிமிடங்கள்
உன்னை - காண
வேண்டுமென்பதற்க்காக....

அதிசயம்:

சில
வேளைகளில்
தேவதைகள் - வழிதவறி
பூமியில்
பிறந்து விடுகின்றன.
என்பதை
என்னவளை பார்த்தபின்புதான்
நம்பினேன்.

மவுன வலி:

சில வினாடி
வலி கூட
சுகமாகத்தான்
இருக்கிறது.
என்னவள்
என்னிடம்
பேசாமல் இருக்கும்போதும்.

புகைபடம்:

நிகழ்காலத்தில்
நிகழ்ந்த நிகழ்வில்
ஒரு வினாடியை
சிறைபிடித்து விட்டேன்
உன்னுடன் சேர்த்து
புகைபடமாக...

வசியம்:

நீ
என்னிடம்
பேசாமல்
இருப்பதால்
பல மடங்கு அன்பை
என்னுள்
விதைத்துவிட்டாய்...

பங்கு:

என் நாட்டில் - எங்கோ
ஓர் மூலையில் எவரோ
சிரிக்கின்றனர் என்றால் அதற்கு
வேண்டுமானால் நான் காரணாமாக
இல்லாமல் இருக்கலாம் - ஆனால்
என் நாட்டில் எந்த ஒரு
மூலையில் யார்
கண்ணீர் சிந்தினாலும் கண்டிப்பாக
அதில் எனக்கும் பங்கு உண்டு.

வரையறை:

தவறு செய்பவன்
மனிதன்
பொருத்துகொள்பவன்
சராசரி மனிதன்
தட்டிகேட்பவன்
கிறுக்கன்.

வரம்:

பூக்களை பறிக்காதே என்ற
எச்சரிக்கைக்கு புறம்பாக - பறித்தேன்.
என்னவள் தலையில் வைத்தால்
பூக்களும் புன்னகைக்கும்
என்பதால்....

கண்ணாடி:

என் செயல்களுக்கு
எதிராக எப்போது - எதிர்ப்புகள்
கிளம்புகிறதோ அப்போது நான்
உணர்ந்து கொள்வேன் - நான்
சென்றுகொண்டிருக்கும் பாதை
சரியானது தான் என்று.

நிஜம்:

எந்த செயலையும்
நாளை தள்ளிவைக்காதே,
இன்று மட்டும்தான்
உனக்கு சொந்தம்.

உதயம்:

தினம் ஒரு கவிதை
சூரியன் உதிப்பதும்,
மாலையில் மறைவதும்.