Monday, December 6, 2010

பார்வை:

உண்மையான
காதலுக்கு - உடல்
தெரியாது.
உள்ளம் மட்டுமே
தெரியும்.

பொய்:

ஏழையின் சிரிப்பில்
இறைவனை
காணலாம் - ஆம்
உண்மைதான்
கடவுள் இல்லை.

புனிதம்:

சொல்லாமல்
இருக்கும்
வரையில்தான்
காதல்
புனிதமானது.

மரணம்:

ஒருவனின்
மரணம் மற்றவர்களை
கண்ணீர் சிந்தவைத்தால்
அந்த
மரணம்
புனிதமாக்கப்படுகிறது.

பாவம்:

உலகில்
மிகவும்
கொடுமையான
செயல் - தான்
மரணமடைந்து
மற்றவர்களை
அழவைப்பதுதான்.

ரசிகன்:

எவனோ ஒருவன்
மகிழ்ச்சியடைவான் என்றால்
நான் எத்தனைமுறை
வேண்டுமானாலும்
தோல்வியடைய தயார்.

சோம்பேறி:

மின்விசிறி
சுற்றிகொண்டிருக்கிறது.
சுறுசுறுப்பாய்...
மனிதன்
அதனடியில்
சோம்பேறியாய்...

தேடல்:

நான் பிறந்ததிலிருந்து,
என் வெற்றியின் தேடல்
தொடங்கிவிட்டது.
இன்றுவரை
தேடிகொண்டிருக்கிறேன்.
சில காலங்களுக்கு பிறகு
வெற்றியடையலாம்.
எனினும்,
வாழ்க்கையில்
தோல்வியடைய போகிறேன்
சில காலங்களுக்கு பிறகு
மரணமடைந்து...

மாற்றம்:

இத்தனை நாள்
சொர்கத்தை
தேடிகொண்டிருந்தேன்..
இந்த நரகத்திலிருந்துகொண்டு
இன்றுமுதல்
நான் வசிக்கும்
நரகம் சொர்க்கமாகிறது.
என்னவளை
பார்த்துவிட்டேன் அல்லவா?
அதனால்தான்.

என் லட்சியம்:

என்
பிறப்பை கண்டு
எத்தனை பேர்,
சிரித்தார்களோ?
எனக்கு தெரியாது.
ஆனால், என் இறப்பை கண்டு
யாரும் கண்ணீர்
சிந்தகூடாது...

சரியான கூற்று:

பெண்ணே,
ஐன்ஸ்டீனின் கூற்று
சரியானது தான்
காலம்
நீண்டும், குறுகியும்தான்
இருக்கிறது.
நீ என்னருகில்
இருக்கும்போதும்
என்னைவிட்டு
விலகியிருக்கும் போதும்.

வறுமை:

நான்
நீ வருவாய் என
எதிர்பார்த்துகொண்டிருந்த
தருணங்களில்
உன்னை
கவிதையாக எழுதியே
வறுமையில் இருக்கிறேன்
இன்று வார்த்தைகள்
தீர்ந்துபோனதால்...

நிழல்:

என் தீவிர
விசிறி
என் நிழல்
நான் எங்கே
சென்றாலும்,
என் கூடவே வரும்.

அய்யோ...:

அழகை பார்த்தால்
கவிதை எழுதலாம் - பெண்ணே
ஆனால் கவிதையை
பாத்தால் என்ன
எழுதுவது.

விருப்பம்:

நான்
என்னை மற்றவர்கள்
நல்லவன் என
நினைக்கவேண்டுமென்று,
கெட்டவனாக
இருக்கமாட்டேன்.
என்னை
மற்றவர்கள்
கெட்டவன் என
நினைத்தாலும்,
பரவாயில்லை - நான்
நல்லவனாக
இருக்க விரும்புகிறேன்.

என்னசெய்வது?:

பெண்ணே
உன் கண்களை
பார்த்த வேளையில்
என் இதயம்
சொல்கிறதடி....
உனக்காக வாழலாம்,
உனக்காக சாகலாம் என்றும்.

புனிதம்:

உலகில்
மிகவும்
கேவலமானது
ஒரு பெண்ணிற்க்காக
சண்டையிட்டு கொள்வதுதான்.
உலகில்
மிகவும்
புனிதமானது
ஒரு பெண்ணிற்க்காக
சண்டையிட்டு கொள்வதுதான்.

உனக்காக:

எத்தனை பேர்
என்னை
சுற்றியிருந்தாலும்,
நான் மட்டும் தனிமையில்
இருக்கிறேன்
நீ வருவாய் என...

நான் கடவுள்:

உயிருள்ள
என்னை படைத்துவிட்ட - இறைவன்
உயிரற்ற என் உடலுக்கு
என் உயிரை கொடுத்துவிட்டான்.
அதனால் தான்
உயிருள்ள என்னால்,
உயிரற்ற, என் உடலை
கட்டுபடுத்த முடியவில்லை
இல்லையெனில்,
உயிருள்ள
நானும் - உயிரற்ற
கடவுளாகதான் இருந்திருப்பேன்
உயிரோடு...

சுய நலம்:

தனக்கென
ஒரு பிரச்சனை
வரும்போதுதான்
எல்லாரும்
கேள்விகேட்க
ஆரம்பிக்கிறார்கள்..

இளமைகாதல்:

கண்களில்
காண்பவர்களையெல்லாம்
காதல் செய்வேன்
எனக்கென ஒருவள்
கிடைக்கும்வரை

உள்ளம்:

கண்படும்படி கட்டியுள்ள
தாஜ்மஹால் அதிசயமல்ல
பெண்ணே - என்
உள்ளத்தில் கண்படாமல்
இருக்கும் உன்னால்.

பாசம்:

வயலில்,
வளர்த்தவனின் பாசத்திற்க்கு
தலைவணங்கியது.
நெல்மணிகள் - அடுத்த நாள்
அறுவடை என
தெரியாமலே...

மலை:

இயற்கை
தன்னை
பாராட்டி தானே - மகுடம்
சூட்டிகொண்டதுதான்
மலை.

பருவமழை:

மழைகாலத்தில் பெய்த
கண்ணீரும்,
வெயில்காலத்தில் பெய்த
மழைன நீரும் - இணைந்து
உப்புன நீரானது
கடலில்.

பயணம்:

மழைகால
வெயிலோடு,
அவளின்
நினைவோடு,
ஒவ்வொரு அடியாய்
கால்தடம் பதிக்கவேண்டும்.
தொலைதூர பயணமாய்
மரணத்தை தேடி...

சோம்பேறி:

உழைத்து உழைத்து
தேய்ந்துபோன
காலணியை
ஒதுக்கிவைத்தான்
வீட்டைவிட்டு
சோம்பேறி.

விருந்து:

என்
அறிவுபசியால்
சுற்றி திரிகையில்
கிடைத்தது விருந்து
புத்தகத்திலிருந்து.

மிதிவண்டி:

அவள்
பாதம் பட்டவுடன்
மிதிவண்டிகூட
மிதிக்காமல் போனது
பள்ளத்தில்
என்னைபோல்.

இ(து)ன்பம்:

வாழ்க்கையில்
இன்பம் என்பது
துன்பம் நம்
கையைவிட்டுபோகும்போது...
துன்பம் என்பது
இன்பத்தை
நாம்
கைவிடும்போது...

மனைவி:

கருவறையிலிருந்த
எனக்கு முன்னுரை
கொடுத்த என்
அன்னையைபோல்
மணவறையில் என்
வாழ்க்கைக்கு அணிந்துரை
கொடுத்தாள்
என் காதலி.

மகள்(ன்):

அன்னையும்,
பிதாவும்
முன்னின்று
எழுதிய
புத்தகம் - மகன்(ள்)

வளர்ச்சி:

எட்டுவயதில்
தாடிவளர்க்க
ஆசைபட்டேன் - ஆனால்
இன்று பதினெட்டு வயது
தாடியே,
என் வாழ்க்கையானது
அவளால்.

மாலை நேரபொழுதில்:

என்னவளை
பார்த்ததால் என்னவோ
மலையின் பின்புறம்,
மறைய
முயன்றுகொண்டிருந்தது  - சூரியன்
வெட்க்கத்தினால் போலும்.

என்னவள்:

மழைத்துளியை
வெயில்
முத்தமிடுவதால்
வானவில் தோன்றும்.
என்ற நியதி
பொய்த்துபோனது
ஓரிரு
நிமிடத்தில்
சாலையைக்கடந்து சென்ற
என் மின்னலால்.

வெட்கம்:

என்னவளை
நான் பார்த்த
அடுத்த வினாடி
உயிரில்லாத
பொருட்களனைத்தும்,
உயிருள்ள எனக்கு
வாழ்த்துக்கள் சொல்லயில்
நானே என்
நிழலில்
ஒளிய முயற்சிசெய்தேன்
வெட்கத்தில்.

அனுபவம்:

இன்று
சரியானவயாக இருந்தவைகள்
அனைத்தும் - நாளை
தவறானவையாக இருக்கலாம்
காரணம்,
நேற்றைவிட - நீ
இன்று ஒரு நாள்
வயதான அனுபவசாலி.

விதி:

தேடல்களின்
முற்றுபுள்ளி - மரணம்
தொடக்கம்
பிறப்பு.

கிறுக்கல்:

கவிதை
எப்படி எழுதவேண்டும் என்று
எனக்கு தெரியாது.
அதனால்தான் - நான்
கிறுக்கும் வார்த்தைகள்
கவிதையாய் இருக்கிறது
என் காதலால்.

சுவடுகள்:

என்
காதலை - உன்னிடம்
சொல்லவில்லை

என்
காதல் - உனக்கும்
தெரியாது.
இந்த
உலகத்திற்கும் தெரியாது.

என்
காதல் - எனக்கு
தெரியும்
நான் இருந்தாலும்,
இறந்தாலும்.

என்
காதல் - சுவடுகள்
என்றும் அழியாது.

Wednesday, December 1, 2010

ஊர்வலம்:

எதையோ வற்புறுத்தி
ஊர்வலமாய்
சென்றுகொண்டிருந்தது
எறும்புக் கூட்டங்கள்.
ஒருவேளை
ஒற்றுமையையோ?

எழுதுகோல்:

என் வாழ்க்கையை
திருத்தி எழுதிய - பென்னை
முதன்முதலில்
பார்த்தபோது - கையில் பிடித்து
எழுததொடங்கினேன்
என் பெயரை.

காமம்:

தொலைவிலிருந்த
என் காதலியின்
கண்களை ரசித்து
கொண்டிருந்த போது...
அவளது அனுமதியின்றி
அவளை
உரசிசென்ற காற்றை
அடைத்துவைத்தேன்
அன்புடன் என்
நுரையிரலில்.

போட்டி:

கதிரவனிடம்
போட்டி போட்ட - நிலா
ஒளிர முடியாமல்
தோற்றுப்போனது.
தேய்பிறையன்று.

உழைப்பு:

நாம்
தேடிபோகும்
இடத்திற்க்கு
உழைப்பால்
பாதை போட்டால்தான்
செல்லமுடியும்.

விடியல்:

இன்று
விடிந்துவிட்டது இரவு
ஆனால்
இன்னும் வெளிச்சம்
கிடைக்கவில்லை
ஏழையின் வீட்டில்.

இரவு:

இரவு கூட
உறவாகிபோனது
பகலில்
அடிகடி உறங்குவதால்.

ஆண்மை:

மரணத்தையும்
முத்தமிடுவேன்,
அவளது நினைவோடு
எமனிடமே யுத்தமிடுவேன்
அவளுக்காக.

நாணம்:

தொட்டவுடன்
சிணுங்கிவிட்டால் - நாணத்தில்
தொட்டாஞ்சினுங்கி.

ஆறு:

சிறுசிறு
மழைத்துளிகளை
அழைத்துசென்று - தற்கொலை
செய்துகொண்டது
ஆறு
கடலில் உப்பு நீருடன்
கலந்து.

இலையுதிர்காலம்:

கல்லூரியின்
கடைசி நாட்கள்
எங்கள் பிரிவை
தாங்கமுடியாமல்
கண்ணீர்வடித்தது
நாங்கள் வைத்த மரம்
இலைகலை
உதிர்த்துகொண்டு...

கல்:

கல்
சிறிப்பியிடம்
உளியால் வாங்கும்
அடியையும் பொருத்து
கொண்டது - சில
நிமிடங்களில்
தானும்
கடவுள்
என்பதாலோ?

பழி:

நாம்
காலால்
மிதித்த வலியை
மவுனமாய்
பொருத்துகொண்டதால்
பழிசுமத்திவிட்டோம்
முள் குத்திவிட்டதென்று.

வலி:

வலிகூட
சுகமாகத்தான்
இருக்கிறது
என் காதலை
மறுத்த உன்னால்
மறைக்க முடியாத
உன் நினைவுகளால்...

துரோகம்:

நன்றிக்காக
சிலை வைத்த
மக்களுக்கு துரோகம்
இழைத்தது
பொய்த்துபோன
பருவமழை.

நட்பு:

கடைக்கடையாய்
தேடியலைந்தேன்
பூவிற்க்காக - கடைசியில்
அவளிடம் கிடைத்தது
நட்பு.

நண்பன்:

எங்கோ பிறந்த
எங்களுக்கிடையில்
மனமாற்றம் - வகுப்பறையில்
நண்பர்களாக நாங்கள்.

அழுகை:

பிரசவத்தில்
அன்னையின்
வலியறிந்து
பிறந்தவுடன் அழுதது
மழழை.

கண்ணீர்:

வயலில்
வாடிகிடக்கும்
பயிர்களைப்பார்த்து
மழைபெய்தது - உழவனின்
கண்களில்.

ஒற்றுமை:

பல நாட்டின்
நதிகள் கூட
ஒற்றுமையாய் இருக்கிறது
கடலில் கலந்து - அதையும்
பிரித்துவிட்டார்கள்
மனிதர்கள்
ஏழுகடலென.

பலம்:

தோல்விதான்
பலம் என
உணர்ந்தேன்
வாழ்க்கையில்
வெற்றிபெற்ற பின்பு.

பசி:

தனி ஒருவனுக்கு
உணவில்லை என்றால்
உலகத்தை அழித்திடலாம்.
யார் அழிப்பது?
பசியால் சுருண்டு கிடப்பவனா
அல்லது பணமுடையவனா?

சதி:

தமிழுக்காக
போராடுபவர்களின்
பட்டியலில் முதலில்
கையெழுத்திட்டான்
அவன்
ஆங்கிலத்தில்.

ஆசிரியர்:

ஏனோதானோ
என் என்னை
படைத்துவிட்ட பிரம்மன்
என் ஆசிரியரிடம்
தோல்வியுறுவான்
வாழ்க்கையை
வகுப்பாக
எடுக்கமுடியாமல்.

விதி:

மதியால்
தான் செய்த
சதியால்
மாட்டிகொண்டு
சொன்னான்
எல்லாம்
"விதியால்"