Wednesday, November 24, 2010

வளர்ச்சி:

அட,
என்ன ஆச்சரியம்
ஆடையின்றி அரைகுறையாய்,
வளர்ந்த பரிணாமம்
முழுமையாய்
வளர்ந்து நிற்க்கிறது
ஆயுதம் ஏந்தி.

மின்வெட்டு:

மனதிலிருந்த அவளை
வரைவதற்க்காக - இடம்
தேடி கொண்டிருக்கையில்
மின்வெட்டு - அவசர
அவசரமாக வெள்ளையடித்தேன்
இருட்டிற்கு - அவளை
வரைவதற்க்காக.

குறை:

எங்கோ இருந்தவனை
குறை கூறிகொண்டிருக்கையில்
என் பிம்பம்
தலைகுனிந்தது.
கண்ணாடியில்.

தேசபற்று:

கண்ணீமைக்காமல்
தேசபற்றை உணர்த்தினான்
இந்தியாவும், பாகிஸ்தானும்
விளையாடிய கொண்டிருந்த
மட்டைபந்தை
பார்த்துக்கொண்டே
ஐந்தாறுமுறை - புகைபிடித்து.

சிகரெட்:

மரணமடையும்முன்
சிறிதுசிறிதாய்
எரிந்து கொண்டிருந்தான்
அவன் கையில்
வைத்திருந்த
கொல்லியால்...

வழிகாட்டி:

புத்தகத்தின் பக்கங்களின் மீது
உறங்கி கொண்டிருக்கும் வேளையில்
கண்களின் இமைகளுக்குள் கனவு...
வாழ்க்கை பாதையில் வழிகாட்டி யாரோ?
பிரம்முடன் தோன்றும் தந்தை
திடுக்கிடெழுந்து திட்டிகொண்டே
புரட்டிபார்த்தேன் - தலைகீழாய்
புத்தகத்தின் பக்கங்கள்.

ரசிகன்:

உயர்வுக்கு
உதாரணமாய் இரு - இல்லை
தாழ்வுக்கு
விதிவிலக்காவது இரு
உன்னை பார்த்து
திருந்தட்டும்
எவனோ ஒருவன்.

சாட்டையடி:

நடந்தே போட்ட
நாகரீகமான
சாலையிலிருந்து - எறும்புகள்
புன்னகைத்ததில்
தலைகுனிந்தது
அரித்துப்போன
நம் நாட்டு சாலை.

மழை நீர் சேகரிப்பு:

சொட்டு சொட்டாய்
ஒழுகி கொண்டிருந்தது - நீர்
தெருகுழாயில்
அருகில் சென்றுகொண்டிருந்தார்கள்
மழை நீரை சேமிக்க சொல்லி.

தவறுகள்:

யாருக்கும்
தெரியாமல்
கைவைத்தேன்
சுட்டது - தீ
மனதினில்...

கவிதை:

ஒன்றரை
வயதிலேயே - நான்
கவிஞனாகி விட்டேன்
"அம்மா"
என்றதால்.

அனுபவம்:

மழலையில்
கைப்பிடித்து - நடக்க
கற்றுகொடுத்த
அன்னையின் கைப்பிடித்து
நடந்தான்
முதியோர் இல்லத்திற்கு.

பாசம்:

வெற்றியை
என்றும் தேடி
கொண்டிருக்கும்
மனிதர்களுக்கிடையில்,
தன் தோல்வியை
எதிர்பார்த்து கொண்டிருந்தாள்
அன்னை தன்
குழந்தையிடம்
விளையாடும் போது.

ஆசை:

தேவைக்காக
இருந்த
ஆசைகள் இன்று,
ஆசைக்காக தேவைபடுகிறது.

நிம்மதியான மரணம்:

காலையில்
கண் விழிப்போம்
என்ற
நம்பிக்கையில் - படிக்கையில்
இறந்ததுக்கூட
தெரியாமல்
உறங்கி கொண்டிருந்தான்.
நிம்மதியாய்

சாக்குபோக்கு:

வகுப்பிற்க்கு
தாமதமானதால்
சில நிமிடங்கள் - பூமியை
பின்னோக்கி
சுற்ற வைத்தேன்
கடிகாரத்தில்..

உண்மை காதல்:

இளமையில்
பூக்களின் மணத்தை
ரசித்தேன் - வயதானபின்
பூக்களை ரசிக்க
தொடங்கினேன்.

காலணி:

உழைத்து உழைத்து,
தேய்ந்துப்போன
காலணியை
ஒதுக்கிவைத்தான்
வீட்டைவிட்டு
சோம்பேறி.

உண்மை:

நீ
செய்த தவறு
உலகிற்க்கு
தெரியவில்லை
என்றாலும்,
உனக்கு தெரியும்
நீ செய்தது
தவறு என்று.

வித்தியாசம்:

வானத்திலிருந்து
விழுவதால் - தண்ணீர்
மழை நீராகிறது.
மழை நீர்
மனிதன் மீது
விழுவதால்
கழிவு நீராகிறது.

கொண்டாட்டம்:

மனிதனின்
முதல் வெற்றியே
அழுகையால்தான்
கொண்டாடபடுகிறது.
பிறக்கும் போது.

தன்னம்பிக்கை:

கடலுக்கு
மட்டும்தான் எல்லை
கடற்கரை.
நிலத்திற்க்கு அல்ல.

சவால்:

நான்
எதிலெல்லாம் வெற்றிபெற
நினைத்தேனோ,
அதிலெல்லாம் - என்னை
தோல்வியடைய செய்தாய்...
நான்
இப்போது அனைத்திலும்
தோல்வியடைய
நினைக்கிறேன்.
இனிமேல்
தோல்வியடைந்து
வெற்றி பெறபோவது
நான் தான்
இனி என்னை
என்னசெய்ய போகிறாய்
விதியே..

உரிமை:

இந்த
உலகத்தை அழிக்கும்
அதிகாரம் - கொண்டவன்
பசியால் இருப்பவன்
மட்டும்தான்.

புதிய பாதை:

தனி ஒரு
மணலையும்,
கல் என்றுதான்
அழைப்பார்கள்
தன்னம்பிக்கையுடன்
தனித்து
நிற்க்குமேயானால்...

Tuesday, November 16, 2010

மவுனமாய்... என் காதல்...

நீ வரும்
பாதையில்
உனக்காகதான்
காத்திருக்கிறேன்.
நான் காத்திருப்பேன்
என்றுதான்
அந்த
பாதையில்
நீ வருகிறாய்.

நீ என்னை
காண என்னருகில்
வருவது தெரிந்தவுடன்,
நான் முகத்தை
திருப்பி கொள்கிறேன்.
உனக்காக
காத்திருக்கவில்லை
என்பதைப்போல்.
நான் உனக்காக
காத்திருக்கிறேன் என
தெரிந்தவுடன்,
நியும் முகத்தை
திருப்பி கொள்கிறாய்.
உனக்காக ஒன்றும்
வரவில்லை என்பதை போல,

நான்
விண்ணை பார்ப்பது போல்
உன்னை பார்க்கிறேன்,
நீ என்னை பார்க்கிறாய
என்று,
நீ மண்ணை
பார்ப்பது போல்
என்னை பார்க்கிறாய்,
நான் உன்னை
பார்க்கிறேனா என்று,

நான் நினைக்கிறேன்
நீதான்
என்னை பார்க்க வேண்டும் என்று.
நீ நினைக்கிறாய்
நான் தான்
உன்னை பார்க்க வேண்டும் என்று.

நீ என்னருகில்
இருக்கும் போதோ - இல்லை
நான் உன்னருகில் இருக்கும் போதோ
நாம் இருவரும்
உண்மையாக காதலிக்கவில்லை.

நான்
உன்னை விட்டு
விலகியிருக்கும்,
நீ என்னை
விட்டு விலகியிருக்கும்,
இந்த
தருணம் தான்,
நாம் இருவரும்
உண்மையாக காதலித்து
கொண்டிருக்கின்றோம்.